சப்பாத்தி கட்லட் : சப்பாத்தியை சிறு துண்டுகளாக பிச்சி போடுங்கள். பின் அதை மிக்ஸியில் அரைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். இப்போது அந்த பொடியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, தேவைக்கேற்ப இஞ்சி விழுது, பச்சை மிளகாய், சாட் மசாலா, உப்பு, கொத்தமல்லி, சிறிது சிகப்பு மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் நன்கு பிசைந்துகொள்ளவும். இப்போது அதனுடன் எலுமிச்சம்பழ சாறு பிழிந்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அவற்றின் ஒரு உருண்டையை எடுத்து தடியான தட்டைகளாக தட்டி வைத்துக்கொள்ளுங்கள். பின் தோசை கல்லை சூடேற்றி அதில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு தட்டைகளையும் அதன் மேல் வைத்து எண்ணெய் தூவுங்கள். இரண்டு புறங்களும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடுங்கள். சட்னி மற்றும் சாஸுடன் சூடாக சாப்பிடலாம்.
சப்பாத்தி நூடுல்ஸ் : மீதமுள்ள சப்பாத்தியை நூடுல்ஸ் போல நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். இப்போது நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், முட்டைக்கோஸ் போன்றவற்றை ஒரு கடாயில் சேர்த்து வதக்கவும். பின் ரெட் சில்லி சாஸ், வினிகர், தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து அதில் நறுக்கிய ரொட்டியைச் சேர்த்து கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.
சப்பாத்தி பொரியல்ட் : சப்பாத்தியை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், மாங்காய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து கைகளால் கலந்துவிடுங்கள். இப்போது வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து கடாயில் வதக்கவும். பின் மசாலா கலந்த சப்பாத்தியை கடாயில் போட்டு கிளறவும். 5 நிமிடங்களில் உங்கள் சப்பாத்தி பொரியல் தயார்.
சப்பாத்தி சாண்ட்விச் : வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகுத்தூள், மல்லி தூள், ஆம்சூர் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது சிறிது கீரை, தக்காளி, வெங்காயம் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். இப்போது மீதமுள்ள சப்பாத்தியில் தக்காளி கெட்ச்அப் அல்லது ஷெஸ்வான் சாஸ் தடவி மசித்த மசாலா உருளைக்கிழங்கு , அதன் மீது சாலட் துண்டுகளை வைத்து சுட்டு எடுக்கவும். நீங்கள் அதன் மீது சீஸ் தூவலாம்.