சீத்தாப்பழம் பலரும் விரும்பி சாப்பிடும் சுவை மிகுந்தது. ஆனால் அதை யாரெல்லாம் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் சீத்தாபழம் சாப்பிடுவது குறித்த அச்சமும் பலரிடம் உள்ளது. இதனால் சீத்தாபழத்தின் ஊட்டச்சத்தை பெற முடியாமலும் போகிறது. எனவே சீத்தாபழம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என பரவும் கட்டுக்கதைகளின் உண்மைகளை உடைக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர்.
அதிக எடை கொண்டவர்கள் : அதிக எடை கொண்டவர்கள் சீத்தாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். எனினும், அது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், அவை வைட்டமின் பி நிறைந்தது. குறிப்பாக வைட்டமின் பி 6 க்கு ஒரு நல்ல ஆதாரமாகும். எனவே, இது வீக்கத்தைக் குறைப்பதில், கொழுப்பைக் கரைப்பதில் கூட வேலை செய்கிறது.