ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தனித்துவமான கொண்டாட்டம் உள்ளது. இந்த கொண்டாட்டங்களில் உணவு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். வெகு விரைவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்பெஷல் உணவுகள், இனிப்புகள், பதார்த்தங்கள் மற்றும் பானங்களுடன் உற்சாகமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸின் கொண்டாட்டங்கள் ஒரு கலாச்சாரம். மற்றும் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுபடும்.
பிரபலமான கிறிஸ்துமஸ் உணவுகளில் அடங்கி இருக்கும் கலோரிகள் : சமையல் முறை, தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பொறுத்து கலோரிகள் ஒரு உணவில் இருந்து மற்றொரு உணவிற்கு மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கிறிஸ்துமஸ் விருந்தின் போது பிரபலமாக பரிமாறப்படும் முக்கிய உணவுகளில் இருக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை பற்றி கீழே பார்க்கலாம்..
ஆல்கஹால்: கிறிஸ்துமஸ் பார்ட்டிகளில் தவறாமல் சில ஆல்கஹால் அடிப்படையிலான பானங்கள் இடம்பெறுவது வழக்கம். ஒயின், ஸ்காட்ச் அல்லது விஸ்கி உங்கள் விருப்பமான பானம் எதுவாக பண்டிகைக் காலங்களில் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். இருப்பினும், நீங்கள் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் திளைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்கள் ஆரோக்கியத்தை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துமஸ் பார்ட்டிகளில் பிரபல பானமாக ரெட் ஒயின் இருப்பதால், ஒரு சிங்கிள் சர்விங்கில் (single serving) சுமார் 125 கலோரிகள் உள்ளன.
பிக்ஸ் இன் பிளான்ங்கட் (Pigs in a blanket): இந்த அழகான, பசியைத் தூண்டும் பைட்-சைஸ்டு உணவுகள் காண்டிமென்ட்ஸ்களுடன் பரிமாறப்படும். சுவையான இந்த டிஷ் croissant மாவில் மூடப்பட்டிருக்கும் sausages-களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த டிஷ்ஷின் சராசரி அளவிலான ஒரு பீஸ் மட்டுமே சுமார் 210 கலோரிகளை கொண்டுள்ளது. எனவே ஒருவர் ஒரு பீஸை மட்டுமே சாப்பிட்டால் நல்லது.