பாதாமை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்..? பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும். அதை ஊற வைத்து உறிக்கும்போதும் அதன் தோல் தடிமனாக இருக்கும். இப்படி கடினமான தோலை அப்படியே சாப்பிடுவதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதிலும் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு தேவையற்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும். எனவேதான் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். ஊற வைப்பதற்கான முதன்மை காரணமும் அதன் தோலை எளிதில் நீக்க முடியும் என்பதற்காகத்தான். அது இரவு முழுவதும் ஊறினால்தான் காலையில் உறிக்கும் போது எளிமையாக இருக்கும்.
பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்..? செரிமானிக்க கடினமாக இருக்கும். இதன் பக்கவிளைவாக வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் உண்டாகலாம். அதுமட்டுமன்றி அதில் இருக்கும் ஆன்டி நியூட்ரியண்ட்ஸ் , டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்றவை தோலில் இருப்பதால் அவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது. இரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம். எனவே அதன் தோலை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும்.