முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

Onion : வெங்காயம் எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. நம் உடல் நலனை காக்கும் உணவுகளில் வெங்காயமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • 17

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    இந்திய உணவுகளின் அடிப்படை சுவை என்றாலே அது வெங்காயம்தான். அது இல்லாமல் எந்த உணவும் சுவை தராது. ஒரு உணவுக்கு நொடியில் சுவை கூட்ட வேண்டும் என்றாலும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதன் மேல் ச் சாரல் போல் தூவினால் போதும் அதன் சுவை மெய் மறக்கும்படி செய்துவிடும். இப்படி சமையலில் கிங்காக இருக்கும் வெங்காயம் சுவைக்கு மட்டும்தான் என நினைக்கிறீர்களா..?

    MORE
    GALLERIES

  • 27

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    அதுதான் தவறு... வெங்காயம் எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. நம் உடல் நலனை காக்கும் உணவுகளில் வெங்காயமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கொளுத்தும் கோடை வெயிலுக்கு வெங்காயம் மகத்தான மருத்துவ பலன்களை தருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எப்படி என்று பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    கோடை பக்கவாதத்தை சரி செய்யும் : கோடை வெப்பம் சிலருக்கு தீராத வியாதிகளை உண்டாக்கும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில் கோடை வெயில் தாக்கத்தால் உண்டாகக் கூடிய பக்கவாதத்தை தவிர்க்க வெங்காயம் நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற கலவை உள்ளது. இது வெப்ப பக்கவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது : பொதுவாகவே கோடையில் ஜீரண சக்தி குறையும். எது சாப்பிட்டாலும் வயிற்றில் மந்தமாக இருக்கும். இதனாலேயே கோடையில் சாப்பிடவே பிடிக்காது. பலரும் உணவை தவிர்ப்பதுண்டு. ஆனால் நீங்கள் வெங்காயத்தை கட்டாயம் உணவில் சேர்ப்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் ஆற்றாலி தூண்டும். இதனால் குடலில் உருவாகக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படும். ஜீரண சக்தியும் மேம்படும்.

    MORE
    GALLERIES

  • 57

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    எலக்ட்ரோலைட்ஸை உருவாக்கும் : எலக்ட்ரோலைஸ்தான் உடலில் மினரல் சக்தியை அளிக்கிறது. மினரல்தான் உடலுக்கு எனர்ஜி தரக்கூடியது. இது அதிகமாக தண்ணீர் , இளநீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் இருக்கும். இவை தவிர இந்த எலக்ட்ரோலைட்ஸ் வெங்காயத்திலும் உள்ளது எனில் ஆச்சரியம்தானே... எனவே அதிக செலவில்லாமல் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமெனில் வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    வெங்காயத்தை எப்படியெல்லாம் உணவில் சேர்க்கலாம் :
    சின்ன வெங்காயத்தை வினிகரில் ஊற வைத்து அதை மதிய உணவில் போது ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    கோடைக்காலத்தில் வெங்காயம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் : ஏன் தெரியுமா..?

    சாலட் வகைகளி சேர்த்துக்கொள்ளுங்கள். காலையில் தோசை சுட்டால் அதன் மேல் தூவி சாப்பிடுங்கள். மதிய உணவில் வெங்காய ஸ்லைஸுகளையும் தனியாக சைட் டிஷில் சேருங்கள். சூப் குடித்தால் அதில் சேர்க்கலாம். இப்படி உங்களுக்கு எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் வெங்காயத்தை சேருங்கள், அதிலும் தயக்கமில்லாமல் எந்த உணவிலும் வெங்காயம் சேர்க்கலாம். அது எந்தவிதத்திலும் அந்த உணவின் சுவையை மாற்றாது. கூடுதல் சுவைதான் தரும்.

    MORE
    GALLERIES