முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

சர்க்கரை, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் இதய நோய்களைத் தடுப்பது வரை, இந்தப் பழங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

 • 18

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உணவில் கருப்பு நிறத்தில் உள்ள பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு பருவத்திலும் வரும் பழங்கள் நம் உடலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாட்டை ஈடுசெய்கின்றன.அந்த வகையில் இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட உடல் ஆரோக்கியம் மேம்படும். சர்க்கரை, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் இதய நோய்களைத் தடுப்பது வரை, இந்தப் பழங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  பிளாக் பெர்ரி - பிளாக் பெர்ரி சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் வைட்டமின் சி, கே அதிக அளவில் உள்ளன. இதனுடன், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மாங்கனீசு மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. பிளாக் பெர்ரி இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. ஹெல்த்லைன் படி, பிளாக் பெர்ரி சாப்பிட்டால் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம். இரத்த சர்க்கரை அளவும் சீராக இயங்க உதவுகிறது. பிளாக்பெர்ரி வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 38

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  பிளாக் ஜாமூன் - இது பார்க்க சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகப்பெரியது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் ஜாமுன் சாப்பிட மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், பெர்ரிகளில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. பெர்ரி சாப்பிடுவதால் எலும்புகளும் வலுவடையும்.

  MORE
  GALLERIES

 • 48

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  கருப்பு திராட்சை - கருப்பு திராட்சையை உட்கொள்வது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஈ, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ரெஸ்வெராட்ரோல் என்ற சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்கள் சேதமடையாமல் தடுக்கிறது. கருப்பு திராட்சையில் முதுமையை தடுக்கும் தன்மை உள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  கருப்பு அத்திப்பழம் - சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கருப்பு அத்திப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிறு தொடர்பான நோய்களுக்கு கருப்பு அத்திப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடலின் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் புரோபயாடிக் பண்புகள் இதில் உள்ளன. இதனால் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. அதுமட்டுமன்றி அத்திப்பழம் அதிக நார்ச்சத்து நிறைந்த பழம். எனவே அத்திப்பழத்தை உட்கொள்வது எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  கருப்பு உலர் திராட்சை - டிரை ஃபுரூட்ஸ் பட்டியலில் கருப்பு திராட்சை தவிர்க்க முடியாத பழம். இந்த உலர் திராட்சையை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரத்த சோகை இருந்தாலும் நீங்கள் கருப்பு திராட்சை சாப்பிட பலன் கிடைக்கும். கருப்பு திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆஸ்டியோபோரோசிஸில் நன்மை செய்வதோடு, முடி உதிர்தலையும், முடி நரைப்பதையும் குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 78

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  கருப்பு மல்பெரி - கருப்பு மல்பெரி பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. WebMD படி, கருப்பு மல்பெரி மலச்சிக்கல், மாதவிடாய் அறிகுறிகள், சளி போன்ற பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  இந்த 7 கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

  கருப்பு செர்ரி - ஒரு பழமாக, செர்ரியின் சுவை பலருக்கும் பிடிக்கும். செர்ரி சுவையாக இருப்பது மட்டுமன்றி, அதன் மருத்துவ குணங்களும் ஏராளம். உங்கள் பழ டயட்டில் இதை சேர்த்துக்கொள்வதால் பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. கருப்பு செர்ரி கீல்வாதத்தம் பிரச்சனைக்கு நன்மை அளிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இருமல் மருந்தாகவும் பயன்படுகிறது. கருப்பு செர்ரி செரிமானத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES