ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆரோக்கிய வாழ்க்கை முறையைத் தக்கவைக்க இரும்பு சத்தை தவிர அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளன.

 • 17

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  பால் வெள்ளை நிறத்தில் உள்ள அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் உள்ளூர் பால் பண்ணைகளிலிருந்து பால் வந்தது, அவை அருகிலுள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் சில அரசாங்க பால் பண்ணைகள் கிளாஸ் பாட்டில்களில் பால் சப்ளை செய்தன. பால் ஒரு ஆரோக்கிய பானம் என்ற செய்தியை 1990-களில் நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரம் வழியே அரசு கொண்டு சென்றது. ஆனால் இன்று திரும்பும் இடமெல்லாம் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை எல்லா இடங்களிலும் பால் விற்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் வாங்காதவர்கள் கூட இன்று இல்லை எனலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பாலின் முக்கியத்துவத்தை (பசும்பால், எருமை பால்) உணர்ந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைத் தக்கவைக்க இரும்பு சத்தை தவிர அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளன. பாலில் புரதம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 12, டி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீண்ட ஆயுள் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் மீண்டும் முக்கியத்துவம் தரும் வேளையில் பால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது நம்முடைய அன்றாடஆரோக்கியமான வாழ்க்கைக்கு பால் உதவுகிறது மற்றும் பாலை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  மஞ்சள் பால்: மஞ்சளின் மகத்துவம் பற்றி நாம் நிறைய அறிந்திருப்போம். பால் என்ற அமிர்தத்துடன் மஞ்சளை கலந்து பருகுவதால் ஏராளமான நன்மைகளை பெற முடியும். இது இந்தியாவுக்கு புதிதல்ல என்றாலும் மேற்கத்திய கலாச்சாரங்களில் தற்போது பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் தரும் மஞ்சள் பால், பாரம்பரியமாக மாட்டு பால் அல்லது எருமை பாலில் மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு, ஜாதிக்காய் போன்ற சில மசாலா பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பானம் உடலுக்குள் இருக்கும் சளி மற்றும் பொதுவான அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே பெரும்பாலான இந்திய வீடுகளில் தொண்டை புண், இருமல், சளி அல்லது காய்ச்சல் இருக்கும்போது இரவில் பெரும்பாலும் ஒரு கிளாஸ் மஞ்சள் பாலை குடிப்பது வழக்கமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக: பாலில் அடங்கியுள்ள கால்சியம் உடலின் எலும்பு ஆரோக்கியம் மற்றும் உறுதியான பற்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர கால்சியமானது இதய துடிப்பு, தசை செயல்பாடு மற்றும் பலவற்றை பராமரிக்க உதவுகிறது. மேலும் எலும்பு ஆரோக்கியத்திற்கான மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் கே பாலில் அடங்கி உள்ளது. ஒருபக்கம் கால்சியம் மற்றும் பால் ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்றாலும், மறுபக்கம் இவற்றை அதிகமாக எடுத்து கொள்வது புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. பால் மற்றும் பால் உணவுகளை அளவாக எடுத்து கொண்டு பச்சை காய்கறிகள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பால் அல்லாத உணவுகளையும் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும் என்கிறர்கள் நிபுணர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  மலச்சிக்கலை குணமாக்கும் : உணவில் போதுமான நார்ச்சத்து, போதிய நீர் உட்கொள்ளல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. படுக்க செல்லும் முன் ஒரு கப் சூடான பாலில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு குடிப்பது மலச்சிக்கலை தீர்ப்பதற்கான எளிய வழிமுறை.

  MORE
  GALLERIES

 • 67

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  நல்ல தூக்கம் : தூங்குவதற்கு அரை மணி நேரம் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் சூடான பால் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். பாலில் இருக்கும் டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் உறக்கத்திற்கு உதவுகின்றன. பல்வேறு வகையான புரதங்களை கொண்ட உணவில் இருக்கும் டிரிப்டோபன் ஒரு அமினோ அமிலம். அதேபோல இயல்பான உடல் கடிகாரம் காரணமாக மெலடோனின் பகல் நேரத்தில் உடலால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இரவில் தான் உற்பத்தியாகிறது. இது தூக்க ஹார்மோன் என்று கருதப்படுகிறது. பாலில் இவை இரண்டும் இருப்பதால் இரவில் நன்றாக தூக்கம் வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் சூடான பாலை குடித்துவிட்டு தூங்க செல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  எலும்பு உறுதி , நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல தூக்கம்..பாலில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

  எடை குறைக்க உதவும் : பாலில் இருக்கும் அதிக அளவிலான புரதச்சத்து எடை இழப்பு மற்றும் தசைகளை வளர்க்கும் இலக்குகளை எளிதாக்கும். பாலில் உள்ள புரதம் உங்கள் வயிற்றை நிறைவுற்றதாக உணர வைக்கும். மேலும், பால் டயட் கலோரி அளவைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுவதாக கூறப்படுகிறது. அதோடு பால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

  MORE
  GALLERIES