ஆர்மேனிய வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களைப் பற்றிய தெரியுமா..? வெயில் காலத்தில் தினமும் சாப்பிடலாம்..!
இதில் முழு ஃபைபர் மற்றும் நீரின் ஆதாரமாக இருப்பதால் வெயில் காலத்தை சகித்துக்கொள்ள இந்த வெள்ளரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சமைக்கவும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.


ஆர்மேனிய வெள்ளரி நாம் பொதுவாகக் காணும் சாதாரண வெள்ளரிக்காயை விட நீளமானது. இந்த காய்கறி கக்கூர்பிட் குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் உள்ளது. வெயில் காலம் வந்துவிட்டாலே இதை எளிதாக சந்தைகளில் காண முடியும். அதேசமயம் விலையும் மலிவானதாக ஏழைகளின் நண்பனாக இருக்கும்.


இதில் முழு ஃபைபர் மற்றும் நீரின் ஆதாரமாக இருப்பதால் வெயில் காலத்தை சகித்துக்கொள்ள இந்த வெள்ளரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சமைக்கவும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது ஊறுகாய் அல்லது இனிப்பு உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய ஆர்மேனிய வெள்ளரியில் சில மருத்துவ குணங்களும் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.


வெயில் கால செரிமாணப் பிரச்னைகளை போக்கும் : நார்ச்சத்துக்கள் நிறைந்தது என்பதால் குடலை சுத்தப்படுத்தவும், குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. இதைத் தவறாமல் உட்கொள்வது இரைப்பை பிரச்சினைகள், வீக்கம், அமிலத்தன்மை, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும். இது செரிமானத்தை எளிதாக்குகிறது.


உடல் எடையைக் குறைக்க உதவுகிறது : ஏற்கனவே கூறியது போல் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை தீவிரமாக்கி உடலில் எந்த கெட்ட கொழுப்பையும் சேராமல் பாதுகாக்கும். இதனால் உடல் கொழுப்பு கூடாமல் இருக்க உதவுகிறது. உடல் எடையும் சீரான அளவில் பராமரிக்கப்படுகிறது.


நீர்ச்சத்தை சமநிலை செய்யும் : நம் உடல் 70% நீரால் ஆனது, இதை சமநிலையை செய்ய குறைந்தபட்சம் 3-5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் உள்ள பி.எச் அளவு குறைந்து பின்னர் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஆர்மேனிய வெள்ளரிகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது. எனவே தான் இது கோடைகாலத்தில் ஏழைகளின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.