முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

  • 15

    கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

    கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். காரணம், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் அவசியம். அந்த வகையில் எதை சாப்பிடலாம் , எதை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகமும், கேள்விகளும் பல வரும். அப்படி உங்களுக்கு வெண்டைக்காய் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் இருந்தால் இனி அந்த குழப்பம் வேண்டாம். வெண்டைக்காயில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் தயக்கமின்றி சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

    வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கர்ப்ப காலத்தில் வெண்டைக்காய் உட்கொள்வது அதன் அதிக ஊட்டச்சத்து காரணமாக பல நன்மைகளை பெற முடியும். இதன் இன்னும் பல நன்மைகளை காணலாம்.

    MORE
    GALLERIES

  • 35

    கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

    Mom Junction.com படி வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்தது. எனவே கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. அதேசமயம் சீரான செரிமானம் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடலால் சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் நிறைவான நார்ச்சத்து காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் கர்ப்பகாலத்தில் வரக்கூடிய நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 45

    கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

    மற்ற நன்மைகள் : வெண்டைக்காய் ஃபோலேட்டின் நல்ல மூலமாகும். இந்த ஃபோலேட் டிஎன்ஏ மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. எனவே வெண்டைக்காய் உட்கொள்வதால் குறைபாடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. அதேசமயம் வெண்டைக்காய் வைட்டமின்களின் சுரங்கம். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி இரும்பை உறிஞ்சி குழந்தை வளர உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

    இந்த வைட்டமின்கள் தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெண்டைக்காய் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகும். கரோட்டினாய்டுகள், பினாலிக் கலவைகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    MORE
    GALLERIES