முகப்பு » புகைப்பட செய்தி » கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

பூண்டை சமையலில் சேர்த்துவிட்டு சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர். இனி பூண்டை ஒதுக்கும் முன் இந்த நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

 • 18

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  இந்திய சமையலில் பூண்டு தவிர்க்க முடியாதது. அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் கட்டாயம் சேர்க்கப்படும். அது சுவைக்காக மட்டுமன்றி பல உடல் நல ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பலருக்கும் அதன் நன்மைகள் தெரிவதில்லை. அதனால்தான் சுவைக்காகவும் மணத்திற்காகவும் மட்டுமே பூண்டை சமையலில் சேர்த்துவிட்டு சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர். இனி பூண்டை ஒதுக்கும் முன் இந்த நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 28

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது : கட்டுப்பாடில்லாத இரத்த அழுத்தம் என்பது பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளை உண்டாக்குகிறது. அதோடு சிறுநீரக செயலிழப்பையும் உண்டாக்குகிறது. எனவே இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க வேண்டியது அவசியம். அதற்கு இயற்கையான வழியாக பூண்டு உள்ளது. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் பூண்டை சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : பூண்டு சளிக்கு நல்ல மருந்து. இதனால் சளியால் ஏற்படும் காய்ச்சல், இருமலைக்கூட தடுக்க முடியும். எனவே பூண்டை அப்படியே சாப்பிடுவதால் தொற்று பாதிப்புகளை தவிர்க்கலாம். குறிப்பாக தொற்று பாதிப்பு உள்ள காலங்களில் காலையில் உணவுக்கு முன் இரண்டு பூண்டை தட்டி மென்று விழுங்குங்கள். நெஞ்சு சளியை முறித்து எடுப்பதிலும் பூண்டு சிறந்தது.

  MORE
  GALLERIES

 • 48

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  கொழுப்பை குறைக்கும் : கெட்ட கொழுப்பை கரைப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. கெட்ட கொழுப்பால் எண்ணற்ற உடல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதை சரி செய்ய பூண்டு நல்ல பலன் தரும்.

  MORE
  GALLERIES

 • 58

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது : ஃபிளேவனாய்டு மற்று பாலிபினால் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் பூண்டில் நிறைவாக இருப்பதால் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் ஆற்றல் கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், நீரிழிவு நோய், அல்சைமர் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளை குறைக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 68

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் : பூண்டு எலும்பு பலவீனத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரிப்பதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  சரும ஆரோக்கியம் : பூண்டு முகப்பரு வர காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் பருக்கள் இல்லாத க்ளியர் சருமம் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

  அழற்சி எதிர்ப்பு பண்புகள் : பல ஆய்வுகள் பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக நிரூபித்துள்ளன. எனவே பூண்டு எண்ணெயை மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு தடவி வர நல்ல மாற்றம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES