முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன.

  • 17

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    முன்னோர்களின் வாழ்க்கைமுறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். அப்படி வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. எனவே சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அப்படி உணவுக்கு பின் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 27

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது: வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது : உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கும். இதனை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    எலும்புகளை வலுவாக்கும்: உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல வகையான சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 57

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு மருந்து. வெல்லம் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    உடல் எடையை குறைக்க உதவும் : வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் காரணமாக எடையை எளிதாக குறைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

    இரத்த சோகையில் பலன் தரும் : வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. இரத்த சோகை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிட வேண்டும்.

    MORE
    GALLERIES