உலகில் அதிகம் உண்ணப்படும் உணவுகளில் ஒன்று - நூடுல்ஸ். உங்களுக்கு பிடித்தமான உணவை நீங்கள் நூடுல்ஸ், பாஸ்தா, சௌமைன் அல்லது ஸ்பெகெட்டி என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் நூடுல்ஸின் அடிப்படை பொருட்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை - முக்கியமாக கோதுமை. இருப்பினும், இந்த மூலப்பொருள் (கோதுமை) தனக்கே சொந்தமான சில குறைபாடுகளையும் கொண்டு உள்ளது.
கோதுமையில் உள்ள கிளைசெமிக் இன்டெக்ஸின் (Glycemic index - GI) அளவு 14 ஆகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ஆரோக்கியமற்ற விருப்பமாக மாறுகிறது. மேலும் கோதுமையில் க்ளூட்டன் (gluten) உள்ளது, இது க்ளூட்டன் அலர்ஜிகள் மற்றும் க்ளூட்டன் இன்டோலரன்ஸஸ் (gluten intolerances) உள்ளவர்களுக்கு ஒரு தகுதியற்ற உணவுத் தேர்வாக அமைகிறது. மேலும் செலியாக் (Celiac) நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கோதுமை மற்றும் அதன் துணை தயாரிப்புகளை தவிர்க்கும்படியும் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
எல்லாவற்றிக்கும் மேலாக இது 2022 ஆம் ஆண்டு ஆகும், எதைக்காட்டிலும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் மீதே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய, எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ஒரு ஆண்டு ஆகும். இதன் விளைவாக உணவுத் துறையில் பல வகையான புதுமைகளும் உருவாகி வருகின்றன. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நாம் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு பொருள் இருந்தால், அதற்கு ஆரோக்கியமான அல்லது தாவர அடிப்படையிலான மாற்று அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்படியான ஒரு உணவு வகையைத்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
வூடுல் வகைகள்: வூடுல் என்றதும் குழப்பம் அடைய வேண்டாம். காய்கறி நூடுல்ஸ் தான் பொதுவாக வூடுல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் இங்கே பேசும் வூடுல்ஸ், அதாவது காய்கறி நூடுல்ஸ் ஆனது கோதுமையை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சமீபத்திய காலங்களில் வூடுல்ஸ் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த மாற்று உணவானது கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும், குறைந்த அளவிலான ஜிஐ (Glycemic index) உள்ள உணவை உட்கொள்ளவும் வழிவகுக்கிறது. இப்படியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில பிரபலமான வூடுல் வகைகள் இதோ:
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளன. இதை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ள கூடாது. எந்தவொரு முயற்சிக்கும் முன்பும் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பும் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.