முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கு விநயிக்கும் பட்டியலில்  இத்தாலிய உணவு இருப்பது இது முதல் முறை அல்ல. 

  • 17

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    சாப்பாடு சாம்பார் ரசம் என்று சாப்பிட்டு அலுத்துப்போகும்போது மேற்கத்திய உணவுகளை பற்றி நினைப்பு வந்து எச்சில்  ஊற வைக்கும். போனை எடுத்து ஆர்டர் செய்யும்போது பெரும்பாலான உணவுகள் இத்தாலிய உணவுகளாக இருப்பதை காணலாம். அந்த அளவிற்கு பலருக்கு பிடித்தமானவையாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    இன்றைய தலைமுறை அதிகம் விரும்பும் பீட்சா, பாஸ்தா, ஸ்பெகட்டி, ரேவியோலி, பெஸ்டோ, லசாகனா உள்ளிட்ட அனைத்து உணவுகளும் இத்தாலிய உணவுகள் தான்.  பாரம்பரிய இத்தாலிய உணவுகள் குறைவான மசாலாப் பொருட்களை மட்டுமே  பயன்படுத்துகின்றன. ஆனால் அது அற்புதமான சுவையை கொண்டு வரும்.

    MORE
    GALLERIES

  • 37

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    பல தலைமுறைகள் பழமையான உணவகங்களில் கூட பழங்கால இத்தாலிய ரெசிபிகள் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா ,   மரத்தாய் வைத்து செய்யப்பட்ட பீட்சா வரை, இத்தாலியின் உணவு வகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட இத்தாலிய உணவுகளுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம் விரைவில் வழங்கப்படலாம் என்று செய்தி வட்டாரங்கள் சொல்கின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    மார்ச் 2023 இன் பிற்பகுதியில் இத்தாலிய அரசாங்கம், நாட்டின் உணவு வகைகளை யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய அங்கமாக சேர்க்க  பரிந்துரைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    MORE
    GALLERIES

  • 57

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    நாட்டின் உயிரியல்-கலாச்சார பன்முகத்தன்மையை வடிவமைப்பதில் இத்தாலிய உணவுகள்  ஏற்படுத்திய தாக்கத்தை அவர்கள் சமர்ப்பித்த  ஆவணம் வலியுறுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கு விநயிக்கும் பட்டியலில்  இத்தாலிய உணவு இருப்பது இது முதல் முறை அல்ல. 2017 ஆம் ஆண்டில், நியோபோலிடன் பாணி பீஸ்ஸா தயாரிப்பது - நியோபோலிடன் பிஸ்ஸாயோலோவின் கலை - மனிதகுலத்தின் யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

    MORE
    GALLERIES

  • 77

    விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

    ஆனால் அங்கீகரிப்பு தொடர்பாக டிசம்பர் 2025 வரை ஒரு முடிவு எடுக்கப்படாது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இத்தாலி மற்றும் அதன் உணவு தொடர்ந்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES