புரதம் நிறைந்த உணவாக டோஃபு பன்னீரை கூறுவார்கள். இதை பெரும்பாலும் 'டோஃபு' (Tofu) என்றே அழைக்கின்றனர். நொதிக்க வைத்த சோயா பீன்ஸில் இருந்து இந்த டோஃபு தயாரிக்கப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக இந்த டோஃபுவை சீனர்கள் தங்களில் உணவில் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆசிய நாடுகளில் இது பிரதான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட டோஃபுவில் உண்மையில் அதிக ஆரோக்கியம் உள்ளதா என்பது பலருக்கும் உள்ள கேள்வி.
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் இறைச்சி அல்லது டோஃபு போன்ற சோயாவினால் ஆன உணவுகளை சாப்பிட்டு வருவார்கள். குறிப்பாக வீகன் வகை உணவை பின்பற்றுவோர் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதத்தை மட்டுமே எடுத்துக்கொள்வர். அந்த வகையில் டோஃபுவில் அதிக புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ராலும் மிக குறைவு என்று ஊட்டசத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டோஃபுவில் பல வகை உண்டு. குறிப்பாக ஒவ்வொரு நாட்டினாரும் பல வகையான டோஃபுவை சாப்பிட்டு வருகின்றனர். பட்டுபோன்ற டோஃபு, சாதாரண டோஃபு, சீஸ் போன்ற டோஃபு, கூடுதல் தடிமன் உள்ள டோஃபு இப்படி இதன் வகைகள் பல உள்ளன. பலர் டோஃபுவை விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணம் அதன் சுவையும், அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும் தான். மேலும் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது. எடையை குறைக்க விரும்புவோர் பலர் டோஃபுவை இதன் கலோரிகளுக்காகவே தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர்.
ஆரோக்கிய பயன்கள் :டோஃபுவை சாப்பிடுவதால் புற்றுநோய் உண்டாகும் என்று பலர் தவறாக நினைத்து வருகின்றனர். இதனால் அது போன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் டோஃபுவை சாப்பிட்டு வருவதால் பல ஆரோக்கிய பயன்கள் உடலுக்கு கிடைக்கிறது. இதில் புரதம் அதிகம் அளவில் உள்ளது மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளது. பலர் இறைச்சிக்கு பதிலாக டோஃபு சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வருவார்கள். காரணம் டோஃபு எடுத்து கொள்வதால் உடல் எடை கூடாது என்பதால் தான்.
புரதம் :டோஃபுவில் 17.3 கிராம் புரதம், 144 கலோரிகள், 1.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இதுவே கோழியின் மார்பு பகுதி இறைச்சியில் 32.1 கிராம் புரதம், 157 கலோரிகள், 1 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இதே போன்ற மாட்டு இறைச்சியில் 28.7 கிராம் புரதம், 286 கலோரிகள், 6.1 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. மேலும் சால்மான் வகை கடல் மீனில் 25.4 கிராம் புரதம், 182 கலோரிகள், 1.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. எனவே பல வகையான உணவுகளை ஒப்பீடுகையில் டோஃபு சிறந்ததாக உள்ளது.
நோய்கள் :டோஃபுவில் நன்மைகள் இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. ஒரு நாளைக்கு 25 கிராம் சோயா சார்ந்த உணவுகளை சாப்பிட்டால் இதய நோய்கள் வருவதற்கு அதிக பாதிப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே குறைந்த அளவு இறைச்சி மற்றும் வெஜிடேரியன் சேர்த்த உணவுகளை எடுத்து கொண்டால் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
கட்டுக்கதைகள் :டோஃபு சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் வரும் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் உண்டாகாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் டோஃபு சாப்பிடுவதால் மார்பக புற்றுநோயின் பாதிப்பை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தினமும் 2-3 டோஃபு சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை தான் உண்டாகும்.