கோடைக்கால பழங்களில் தர்பூசணிக்கு இணையாக மக்கள் வாங்குவது முலாம் பழம்தான். இதன் சதைப்பகுதி இனிப்பும், நல்ல நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். அதோடு எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளதாக ஆயுர்வேத நிபுணர் தீக்ஸா பவ்சான் இன்ஸ்டாகிராம் போஸ்டில் பகிர்ந்துள்ளார். அதாவது இது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது, மினரல் சத்தை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார். குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய சிறுநீர் பாதை நோய் தொற்றையும் சரி செய்ய உதவுவதாகக் கூறியுள்ளார். எப்படி என்று பார்க்கலாம்.
சிறுநீர் பாதை நோய் தொற்றை தடுக்குமா ? : இன்ஸ்டாகிராமில் தீக்ஸா சிறுநீர் பாதை நோய் தொற்றை UTI (Urinary tract infection) சரி செய்வதற்கான பண்புகள் இதில் அதிகமாகவே உள்ளன. அதாவது முலாம் பழத்தின் சதைப்பகுதி நச்சுத்தன்மைகளை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி முடக்கு வாதம் (rheumatoid arthritis) நோயை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயத்தை பாதுகாக்கிறது : இது ஆன்டிகோகுலண்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் இரத்தம் தானாகவே அடர்த்தியாகி உறைவதை தடுக்கிறது. இது தமனிகளில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்த நாளங்களை கூடுதல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது : இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் மிகக் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. முலாம் பழத்தை மதிய சிற்றுண்டியாக உட்கொள்வது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது. இதில் குறைவான கலோரிகள் மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது. எனவே இது உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும்.