சிலருக்கு உணவில் தயிர் இல்லை எனில் அந்த உணவு முழுமைப் பெறாது. அந்த அளவிற்கு தயிர் நம் உணவின் ஒரு அங்கம். தயிர் குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும் புரோபயாடிக் நிறைந்த உணவாக அறியப்படுகிறது. நேரடி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வைத்திருக்க உதவுகின்றன. மனித உடல் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களால் ஆனது. புரோபயாடிக்குகள் இருப்பது நல்லது, ஏனெனில் இது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு, தயிர் நன்மை பயக்கும். பொதுவாகவே அவர்கள் புரோபயாடிக் நிறைந்த உணவை சாப்பிடலாம். ஏனெனில் அது அவர்களின் வயிற்றில் எளிதாக செரிமானிக்கும். தயிர் போன்ற புரோபயாடிக் கோடை காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், குளிர்காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானதா? தயிர் இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா என்று பார்க்கலாம்.
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது பாதுகாப்பானதா? : குளிர்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோய்வாய்ப்படாமல் தடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும். பருவகால உணவுகளை உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இருப்பினும், குளிர்காலத்தில், உணவு உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் தயிர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது கால்சியம் நிறைந்ததாக உள்ளது. உடலையும் எலும்புகளையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. தயிர் அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாயுவை தடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் புரதம் : தயிரில் வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. லாக்டோபாகிலஸ் இருப்பதால் ஆபத்தான பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. தயிர் ஒரு புளிக்கவைக்கப்பட்ட உணவாக இருப்பதால் அதில் வைட்டமின் சி-யும் உள்ளது. சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைட்டமின் சி ஒரு சிறந்த மூலமாகும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதை விட, வாங்கிய உடனேயே அதை உட்கொள்வது எப்போதும் நல்லது.
எலும்பு ஆரோக்கியம் : தயிர் உடலில் உள்ள எலும்பை பலப்படுத்துகிறது. குளிர்காலம் சிலருக்கு உடல் பலவீனத்தை உண்டாக்கும். தயிரில் கால்சியம் இருப்பதால், எலும்புகளின் அடர்த்தியை சமநிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது. தயிரில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. மேலும் இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
தோலுக்கு நல்லது : தயிர் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. தயிரில் சருமம் வறண்டு போவதைத் தடுக்க இயற்கையான ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. இரைப்பை குடல் பிரச்சனைகளால் முகப்பரு உள்ளவர்களுக்கு தயிர் உதவியாக இருக்கும். குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தயிரில் சில கூறுகள் இருப்பதால், அனைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் போக்கும். தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், அதை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம், இது ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது மற்றும் இறந்த செல்கள் அழுக்குகளை நீக்குகிறது.