ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

பீட்ரூட் மற்றும் கேரட்டை மிக்ஸி அல்லது பிளென்டரில் அரைத்து சாறு போன்று எடுத்துக்கொண்டு அதனுடன் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் வந்தால் எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது.

 • 17

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  இன்றைக்கு ஆண்களை விட பெண்களுக்கு அவர்களது உடலில் இரும்புச்சத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பொதுவாக இரும்புச்சத்து என்பது உடலுக்குத் தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இருந்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை ஈடு செய்வதற்கும் உதவுகிறது. உடலில் இருக்கும் இரும்புச்சத்தில் 70 சதவீதம் வரை ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களிலும், மியோகுளோபின் எனப்படும் தசை செல்களிலும் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஆக்ஸினை நுரையீரலில் இருந்து மற்ற எடுத்து செல்வதற்கு ஹீமோகுளோபின் அவசியம்.

  MORE
  GALLERIES

 • 27

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  இந்த சூழலில் உங்களுக்கு இதன் அளவு குறையும் போது தான், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. முன்பே சொன்னது போல பெண்களுக்குத் தான் இப்பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடுகளை சரிசெய்வதற்கு சில உணவுகளை நீங்கள் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இரும்புச்சத்து குறைபாட்டை மேம்படுத்த உதவும் உணவுகளின் லிஸ்ட்..

  MORE
  GALLERIES

 • 37

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  பீட்ரூட் மற்றும் கேரட் : பீட்ரூட் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. குறிப்பாக உங்களது உணவில் பீட்ரூட்டைச் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. பீட்ரூட் மற்றும் கேரட்டை மிக்ஸி அல்லது பிளென்டரில் அரைத்து சாறு போன்று எடுத்துக்கொண்டு அதனுடன் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் வந்தால் எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது.

  MORE
  GALLERIES

 • 47

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  முருங்கை கீரைகள் : முருங்கைக் கீரையில் ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் மெக்னீசியம், புரதம், பீட்டா கரோட்டீன் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது முருங்கைக் கீரையை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு மட்டுமின்றி முருங்கை கீரை அதாவது முருங்கை இலையை பொடியாக வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் திராட்சை : இதில் இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. நீங்கள் அப்படியே சாப்பிலாம் அல்லது 2-3 நாள்கள் இரவு ஊறவைத்த பேரீச்சம்பழங்கள், 2 அத்திப்பழங்கள் மற்றும் ஒரு தேக்கரண்டி திராட்சையும் சேர்த்து சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  கோதுமை புல் : உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் இரத்த அளவை மேம்படுத்தும் உணவு வகைகளில் ஒன்று கோதுமை புல். இதில் வைட்டமின் கே, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே இந்த கோதுமை புல்லை அரைத்து சாறாக தினமும் காலையில் சாப்பிடும் போது உடலில் இரத்த அளவு அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!

  எள் விதைகள் : இரும்புச் சத்துக் குறைபாட்டை சரிசெய்வதில் முக்கிய பங்காற்றுகிறது எள் விதைகள். இதில் உள்ள இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. எனவே நீங்கள் சுமார் 1 டேபிள் ஸ்பூன் கறுப்பு எள் வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் நெய்யுடன் கலந்து உருண்டையாக உருட்டி உங்கள் உடலின் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES