கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. மேலும், கிரீன் டீயிலுள்ள எல்-தியானைன் என்ற பொருள் மூளையை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் கிரீன் டீயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதை அருந்துவதன் மூலமாக இளமையுடனே இருக்கலாம். வயதான தோற்றம் தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டீயை அருந்துவது நல்லது.
மசாலா டீ: டீ துளுடன் ஏலக்காய் , இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்தால் அது மசாலா டீ. இதில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி மருத்துவ குணம் உள்ளது. தொண்டையில் உள்ள பிரச்சனை சளி, வரட்டு இரும்பல், உடல் வீக்கம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பலவிதமான நன்மைகளை தருகிறது.
புதினா டீ: புதினா தேநீர் நறுமணத்துடன் இருக்கும். இதை அருந்துவதினால் குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும். மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் குணமுடையது. இந்த புதினா தேநீரினால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.