இப்படி எல்லா விதத்திலும் நம்மோடு இருக்கும் டீயை கொண்டாட ஒரு நாள் வேண்டாமா..? அதை சிறப்பிக்கவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15 உலக டீ தினமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், நேப்பால், வியட்நாம், இலங்கை, கென்யா, இந்தோனேசியா, உகண்டா, மலேசியா, தன்சனியா போன்ற நாடுகளில் வெகு விமர்சையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதன் சுவைக்காக மட்டுமன்றி தேயிலை விவசாயிகளை நினைவு கூறும் வகையிலும், வர்த்தகத்தில் அதன் லாபத்தின் தாக்கத்தை பேசவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சரி இப்படி புகழ்வதற்கு அந்த டீக்கு அப்படி எதிலிருந்து சுவை கிடைக்கிறது..? தரமான சிறப்பான டீ எது..? உங்கலால் கண்டறிய முடியுமா..? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ...
காய்ந்த இலைகளை கவனியுங்கள் : காய்ந்த தேயிலைகளை வைத்தே பல விஷயங்களைக் கண்டறியலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இலையில் அமைப்பு, நிறம் ஆகியவற்றை வைத்து கண்டறியலாம். வாங்கும் டீ இலைகளில் தூள் நிறைய இருந்தால், அதன் நிறம் மாறி, இலைகள் மிகவும் உடைந்து இருந்தால் அது போலியானது. அதுவே சீரான இலைகளாக, நிறம் மாறாமல், முழு இலைகளாக இருப்பின் அது நல்ல தேயிலை என்று கூறப்படுகிறது.
சுவை : டீ கூட ஒரு வகையில் மது சுவை போன்றதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். டீ அருந்தும்போது அதன் ஒரு துளி நாவில் படும்போது கண்களை மூடி நாவை உச்சு கொட்டி உள்பக்க மேல் வாயில் ஒரு தட்டு தட்டி குடித்துப்பாருங்கள். அதன் சுவையும், தரமும் நாவை விட்டு அகலாது. அது ஒரு வகையில் கசப்பதுபோலும்..கசப்பு இல்லாமலும் அதேசமயம் அந்த சுவை மீண்டும் மீண்டும் கேட்கும் அளவுக்கு இருக்கும்.