அக்டோபர் 1ம் தேதி உலக காஃபி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழவதும் இருக்கும் காபி பிரியர்கள், அதன் மனம் மற்றும் சுவையை கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும், தேயிலை மற்றும் காபி தொழிலை மட்டும் நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மொரோக்கோவைச் சேர்ந்த சூஃபி அறிஞர் நூருதின் அபு அல்கசன் என்பவரால் பழக்கத்துக்கு வந்த காபி, இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தன்வயப்படுத்தி வைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே காபி பயன்பாடு வந்துவிட்டது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் முதன் முதலாக காபி பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சுவரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் தான் காபிக்கு அதிக மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது.கோடிக்கணக்கானோரை தன்வயப்படுத்தி வைத்திருக்கும் அந்த காஃபியில் அப்படி என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்.
மருத்துவ குணம் : அண்மைக்காலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என மாரடைப்பால் உயிரிழப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயத்துக்கு மட்டுமல்லாமல் கல்லீரலையும் பாதுகாக்கிறது. 2016ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று, காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு திசுக்கள் இறுகி ஏற்படும் நோயான ஸ்கலரோசிஸ் பாதிப்புகள் குறைவு என தெரிவித்துள்ளது.
புத்துணர்ச்சி : நீண்ட நேரம் வேலை செய்து மிகவும் களைப்பாக இருப்பவர்கள், உடனடியாக ஒரு டீ குடித்தால் புத்துணர்ச்சியாக இருப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். களைப்பாக இருப்பவர்கள், தங்களை உடனடியாக புத்துணர்ச்சியாக்கிக்கொள்ள குடிக்கும் பானம் டீ. இது உண்மையும் கூட, மேலும், காபியில் இருக்கும் கைஃபைன், பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ஆற்றல் படைத்தது.
ஆன்டிஆக்சிடன்டுகள் : ஆன்டிஆக்சிடன்டுகள் வளமாக இருக்கும் ஒரு பொருள் என்றால், உறுதியாக சொல்லலாம் அது காபி. இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்டுகள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய செல்களையும் எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் படைத்தவை. மயக்கம் வரும் வேளைகளில் காபி குடித்தால், அதில் இருந்து நீங்கள் உடனடியாக மீளலாம்.
கொழுப்பை குறைக்கும் : உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது நல்லதல்ல. இதனை குறைக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், நாள்தோறும் காஃபி குடியுங்கள். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகள் விரைவாக கரைந்துவிடும். ஏனென்றால், காஃபியில் இருக்கும் காஃபின், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது.