நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள் என்றால் தினசரி ஒர்கவுட்ஸ், புதிய டயட், டிடாக்ஸ் ரெசிபிகள் என உங்கள் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி இருக்கும். நீங்கள் டயட் மூலம் எடை குறைப்பில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் காஸ்டலியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தான் டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் விரும்பி உண்ணும் எளிய உணவு ஒன்றின் மூலமே எடை குறைப்பை எளிதாக்கலாம்.
தினசரி நம் வீடுகளில் செய்யப்படும் இட்லி & சாம்பார் உங்கள் எடையை குறைக்க வெகுவாக உதவும். மென்மையான இட்லி மாற்று அசத்தலான சாம்பாரின் காம்பினேஷன் சுவை உண்மையில் நிகரற்றது. ஆனால் பலருக்கும் தினசரி இட்லி சாம்பார் சாப்பிடுவது போரடிக்கிறது என்பார்கள். ஆனால் இதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகமானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இட்லியை சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டாலும் சரி, சட்னிகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சரி எடை குறைப்பிற்கு கணிசமாக உதவுகிறது.
இட்லியில் க்ரீஸ் கன்டென்ட் குறைவாக இருப்பதால் கலோரி அளவும் குறைவாகவே காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகளைத் தேடுகிறார்கள். அவர்களுக்ககான ஒரு சிறந்த உணவு தான் இட்லி சாம்பார். வேகவைக்கப்படுவதால் இட்லியில் கலோரிகள் குறைவாக இருக்கும். அதே சமயம் இட்லி மாவில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கார்போஹைட்ரேட்ஸை குறைவாக எடுத்து கொள்ள நீங்கள் திட்டமிட்டிருந்தால் அரிசியை குறைத்து உளுந்தின் அளவை சற்று அதிகரித்து கொள்ளலாம். மேலும் தோசை மாவுடன் ஆரோக்கியமான மசாலாக்களையும் சுவை மற்றும் ஆரோக்யத்திற்காக சேர்த்து கொள்ளலாம்.
இது தவிர ஓட்ஸ் மாவு மற்றொரு சிறந்த ஆப்ஷன் ஆகும். பாரம்பரிய இட்லிக்கு ஆரோக்கியமான மாற்றாக ஓட்ஸ் இட்லி இருக்கிறது. ஏனென்றால் ஓட்ஸில் அதிக அளவு புரோட்டின் மற்றும் ஃபைபர் சத்து உள்ளது. எனவே ஓட்ஸ் மாவில் செய்யப்பட்ட இட்லியை சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் வைக்க உதவும்.இட்லி சுடுவதற்கான மாவு புளிக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாகவே புளித்த உணவுகள் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்து காணப்படும் அதிக சத்தான உணவுகள் மற்றும் எளிதில் ஜீரணிக்க கூடியவை. பிரபல மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணரான ஷில்பா அரோரா கூறுகையில், புளித்த உணவுகளில் இருக்கும் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்புடைய குடலில் உள்ள PH சமநிலையை பராமரிக்கிறது என்றார்.
மறுபுறம் சாம்பார் காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. எனவே சாம்பாரில் ஃபைபர் சத்து, புரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். எனவே சாம்பார் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் குறைவான கலோரிகள் அடங்கியது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. எடை குறைப்பை ஊக்குவிக்க சாம்பாரில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால் இட்லி & சாம்பாரில் ஃபைபர் சத்து அதிகம் என்பதால் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் அதிகப்படியான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.