ஹோம் » போடோகல்லெரி » lifestyle » நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

ஐஸ் கிரீமை சாப்பிடும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், புத்துணர்ச்சியாகவும், பாசிடிவ் எண்ணங்களையும் கொடுக்கிறது. நீங்கள் கடுமையான கோபத்திலோ அல்லது சோர்வாகவோ இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டுப் பாருங்கள் புது உற்சாகம் பிறக்கும்.

 • 17

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  சுவையான ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் அல்லது அதனால் திருப்தியடையாதவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அந்தளவுக்கு ஏராளமான வெரைட்டியையும், சுவையையும் கொண்டிருக்கும் ஐஸ்கிரீம்-ஐ தேடிச் சென்று உண்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஏதாவதொரு ஐஸ் க்ரீம் ஃப்ளேவருக்காவது நிச்சயம் அடிமையாக இருப்பார்கள். ஐஸ் கிரீமை மட்டுமே உணவாக வருடம் முழுவதும் எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 27

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  தற்போது கோடை காலம் நிலவி வருவதால், உணவின் ஒருபகுதியாக ஐஸ் கிரீமும் மாறிவிட்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காலை நேரத்தில் ஐஸ் கிரீம் எடுத்துக்கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. காலை உணவாக ஐஸ் கிரீமை சாப்பிடும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், புத்துணர்ச்சியாகவும், நேர்மறையாகவும் இருக்கலாம். இதுமட்டுமல்லாது மற்ற நன்மைகளையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  எனர்ஜி பூஸ்டர் : ஐஸ்கிரீம் ஒரு எனர்ஜி பூஸ்டர் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எப்போதாவது ஐஸ்கிரீமை சுவைத்திருந்தால் திருப்தியையும், மகிழ்ச்சியையும் உணர்ந்திருப்பீர்கள். ஐஸ்கிரீமில் இருக்கும் சுவையூட்டியான சர்க்கரையே அதற்கு முக்கிய காரணம். ஐஸ்கிரீமில் இருக்கும் சர்க்கரை உங்களுக்கு நல்ல ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. உங்களால் நாள்தோறும் கடைகளில் வாங்கி ஐஸ்கிரீமை சாப்பிட முடியும் என்றாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் வீட்டிலேயே தயாரிப்பது நல்லது. நீரிழிவு நோயாளியாக இருந்தால் சர்க்கரை உள்ளடக்கத்தை கொண்ட ஐஸ்கிரீமை தவிர்த்துவிட வேண்டும். சர்க்கரை இல்லாத ஐஸ் கிரீம்களை தேர்தெடுத்து சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  எலும்பு ஆரோக்கியம் : ஐஸ் கிரீம்கள் பெரும்பாலும் பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. கால்சியம் சத்து நிறைந்திருக்கும் பாலை குடிக்கும்போது எலும்பு ஆரோக்கியம் மேம்படும். நேரடியாக பாலைக் குடிப்பதைக் காட்டிலும் ஐஸ் கிரீமை உருவாக்கி சாப்பிடும்போது கால்சியம் சத்துடன் சில கூடுதலான வைட்டமின்களும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும். மேலும், மிகச்சிறந்த உணவை சாப்பிட்ட மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்கும். உடலின் அனைத்து பகுதிகளின் எடையை பராமரிப்பது எலும்பு என்பதால், அவற்றை சரியாக கவனித்துக் கொள்வது தேக ஆரோக்கியத்தில் முக்கியமான விஷயம். எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனிக்க தவறிவிட்டால், ஆங்காங்கே உடலில் வலி ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 57

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  எடை இழப்பு : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் சிலர், அதனை கடினமானதாகவும், சவாலாகவும் இருப்பதாக உணர்வதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். உண்மையில், அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொண்டால், வழக்கத்தை விட வேகமாக உடல் எடையை குறைக்கலாம். அந்தவகையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமை உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும். குறைவான சர்க்கரை இருக்கும் ஐஸ் கிரீம்கள் குளிர்ச்சியாக இருக்கும்போது சாப்பிட்டால், உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். குளிர்ச்சியான பொருட்களை கூடுதல் கலோரிகளை எரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ் கிரீம் சாப்பிடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளக்கூடாது, கூடவே முறையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 67

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  மூளை சுறுசுறுப்பு : மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு ஐஸ் கிரீம் உதவியாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. காலை நேரங்களில் மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருக்கிறீர்கள் என்றால் ஒரு ஐஸ் கிரீமை சாப்பிடுங்கள். உடனடியாக உங்களின் மூளை புத்துணர்ச்சி அடைந்து, வேலை செய்வதும் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  நீங்கள் ஐஸ்கிரீம் பிரியரா..? உங்களுக்கான சுட சுட செய்தி இதோ...மறக்காமல் படியுங்கள்..!

  நம்மை உயிரோடும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கை இதயம் வகிக்கிறது. அந்த இதயம், உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது. இப்படியான முக்கிய பணியை செய்யும் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். ஐஸ் கிரீம்கள் சாப்பிடும்போது அதில் இருக்கும் ப்ளவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் இதயப் பகுதியில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES