இன்றைய நவீன உலகில் ஃபிட்டாக இருப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற தேவையும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இது அத்தனைக்கும் வாழ்க்கை முறையில் நிகழ்ந்த சில மாற்றங்களே காரணம். ஏனெனில் நவீன மாற்றங்கள் அனைவரையும் ஆரோக்கியமற்ற உணவுகளை நோக்கியும், உடல் உழைப்பு இல்லா வேலைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டது. அதன் விளைவுதான் உடல் எடை அதிகரித்தல்.