முகப்பு » புகைப்பட செய்தி » ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

பீட்சா முதல் ரோல் வரை எல்லா உணவு வகைகளிலும் சீஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளிலும் சீஸ் என்பது பிரியமான ஒன்றாக மாறி உள்ளது. ஆனால், இந்த சீஸை பாதுகாப்பாக சேமித்து, நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

  • 17

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    உணவுகளில் பல வகைகள் இருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் விருப்பமான உணகளில் ஒன்றாக இருப்பது சீஸ் தான். பீட்சா முதல் ரோல் வரை எல்லா உணவு வகைகளிலும் சீஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளிலும் சீஸ் என்பது பிரியமான ஒன்றாக மாறி உள்ளது. ஆனால், இந்த சீஸை பாதுகாப்பாக சேமித்து, நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் இது குறித்த விரிவான குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 27

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    தேதி : உங்களின் ஃபிரிட்ஜில் சீஸ் வைப்பதற்கு முன், உங்கள் சீஸின் வகை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியுடன் லேபில் போன்று தயார் செய்து கொள்ளவும். பொதுவாக சீஸ் பிரெஷ்ஷாக இருக்கும்போது சிறந்தது, எனவே அதன் தேதியை வைத்து பயன்படுத்துவது என்பது நல்ல யோசனையாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    சீஸ் பேப்பர் : உங்கள் சீஸ் முடிந்தவரை கெட்டு போகாமல் பிரெஷ்ஷாக இருக்க, சீஸ் பைகள் அல்லது சீஸ் பேப்பரை பயன்படுத்தி அதை சேமித்து வருவது நல்லது. இவை நுண்துளைகளை கொண்டவை, எனவே எந்தவித பாதிப்புகளையும் சில காலத்திற்கு ஏற்படுத்தாது.

    MORE
    GALLERIES

  • 47

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    பிளாஸ்டிக் ரேப்பர் : சீஸை பாதுகாத்து வைக்க பலரும் பிளாஸ்டிக் ரேப்பரை பயன்படுத்துவார்கள். இது ஒரு எளிதான வழிதான். என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதை கெட்டு போவதற்கு வழி செய்கிறீர்கள். ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைப்பதால், சீஸ்ஸில் காற்றோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் அதில் பூஞ்சை உருவாகிறது. அதே போன்று, நீங்கள் இதை பிளாஸ்டிக்கில் சேமிக்கும்போது, ​​​​சீஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் பண்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது. எனவே, பிளாஸ்டிக் ரேப்பரில் சீஸை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    எண்ணெய் : சீஸ் மீது ஒருவித மேற்பரப்பு தோன்றுவதைத் தடுக்க, முன்பு வெட்டப்பட்ட சீஸை கனோலா அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி அதன் மீது லேசாக தடவலாம். பின்னர் காற்றுப்புகாத பாத்திரத்தில் இதை சேமிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ​​மேற்பரப்பு வளர்ந்தாலும், அவை எண்ணெய்யில் தான் உருவாகும். மேலும் சமைக்க பயன்படுத்தும் போது, ஒரு பேப்பர் டவலைப் பயன்படுத்தி இதை லேசாக துடைத்து பயன்படுத்தினால் போதும்.

    MORE
    GALLERIES

  • 67

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    மெழுகு அல்லது காகிதம் : சீஸ் பேப்பர் இல்லாவிட்டால், மீதமுள்ள சீஸை மெழுகு அல்லது காகிதத் பையில் வைத்து, பின்னர் அதை ஓரளவு சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் வைக்கவும். அவ்வாறு செய்வது சீஸ் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு இடையில் ஒரு தடையை உருவாக்கும், அதே நேரத்தில் பிளாஸ்டிக்கானது உலர்வதைத் தடுக்கிறது. இது முன்கூட்டியே வெட்டப்பட்டிருந்தால், நீங்கள் துண்டுகளை காகிதத்தில் போர்த்தி, அதை மூடப்படாத பையில் மீண்டும் வைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

    உப்புநீர் : சீஸில் வடிந்து இருக்கும் உப்புநீரை ஒவ்வொரு நாளும் மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் சீஸ் மிக நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்க உதவும். மேலும், நீங்கள் சீஸ் சேமித்து வைத்திருக்கும் பாத்திரம் 2 நாட்களுக்குள் ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அது கெட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த உப்புநீரை தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பைக் கலந்து அதில் சீஸை வைப்பது தான்.

    MORE
    GALLERIES