முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

முந்திரியை மொத்தமாக, கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கி வைக்கும் பழக்கம் உள்ளது.இப்படி நீங்களும் முந்திரியை வாங்குகிறீர்களா? அப்படி வாங்கினாலும் பல நாட்களுக்கு கெடாமல் இருந்திருக்கிறதா?

  • 18

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    இனிப்பு முதல், ரிச்சான கிரேவிகளுக்கு கூடுதலான சுவையைத் தர முந்திரி பருப்பை பலரும் சேர்ப்பார்கள். முந்திரியை வறுக்கும் போதே எச்சிலூற வைக்கும் வாசனை தோன்றும். அது மட்டுமல்ல, முந்திரியில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துலல்ன. இதில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, பி 6 மற்றும் போலிக் அமிலம் போன்ற பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளதால் இதயத்துக்கு நல்லது. இதோடு இதில் உள்ள கொழுப்பில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான ஓலிக் அமிலம் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது முதல் எடை இழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முந்திரியை சாப்பிடலாம். சில நேரங்களில் முந்திரியை அப்படியே அல்லது வறுத்து சாப்பிடலாம்; மற்றும் சமையலில் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    வீட்டில் பண்டிகைகள் மற்றும் விசேஷங்களுக்கு முந்திரி இல்லாமல் சமையலே இருக்காது. சில நேரங்களில் விசேஷங்கள் தொடர்ந்து வரும் போது, முந்திரியை மொத்தமாக, கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கி வைக்கும் பழக்கம் உள்ளது.இப்படி நீங்களும் முந்திரியை வாங்குகிறீர்களா? அப்படி வாங்கினாலும் பல நாட்களுக்கு கெடாமல் இருந்திருக்கிறதா? இதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது கவனித்துள்ளீர்களா? பொதுவாக நிறைய முந்திரியை வீடுகளில் வாங்கி வைத்தாலும் அதன் மொறு மொறுப்புத்தன்மை என்பது பல நாட்களுக்கு நீடிக்காது. இதனால் அதன் சுவையும் குறைந்துவிடும். எனவே இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் சில டிப்ஸ்கள் இங்கே…

    MORE
    GALLERIES

  • 48

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    ஸ்டோர் செய்யும் முன்பு வறுக்கவும் : நீங்கள் வாங்கும் முந்திரி பருப்பை பல நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நீங்கள் இதை லேசாக வறுக்க வேண்டும். கடாயில் முந்திரியைப் போட்டு, சிறிது பழுப்பு நிறம் மாறியதும் ஒரு தட்டில் ஆற வைத்து பின்னர் நீங்கள் ஏதாவது ஒரு பாக்ஸில் சேகரித்து வைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    காற்று புகாத டப்பாக்களில் வைத்தல்: முந்திரியை சேமிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று சரியான டப்பாவில் சேமித்து வைப்பது தான். கடையில் இருந்து முந்திரியை நீங்கள் வாங்கியவுடன், ஏர்-டைட் கன்டைனரில் சேமித்து வைக்கவும், ஏனெனில் அவற்றை காற்றோட்டமாக வைத்தாள், நிறம் மாறும், கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    ஜிப்-லாக் பையில் சேமித்தல் : முந்திரியை சேமிப்பதற்கான மற்றொரு வழி அவற்றை நீங்கள் ஜிப்- லாக் பையில் போட்டு வைப்பது. இதில் இறுக்கமான சீல் உள்ளதால் வெளியில் இருந்து ஈரப்பதம் உள்ளே வராமல் தடுக்கிறது. இவ்வாறு நீங்கள் சேகரிக்கும் போது உங்களது முந்திரி பருப்பானது பல நாட்களுக்கு புதிதாக இருப்பதோடு மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 78

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமித்தல் : நீங்கள் வாங்கிய முந்திரி பருப்பை சேகரித்து வைக்க வேண்டும் என்றால் நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேகரித்து வைக்கலாம். இதை நீங்கள் அதிக வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் வைக்கும் போது நமத்துப் போய்விடும். இதனால் இதன் சுவையும் குறைந்துவிடும்.

    MORE
    GALLERIES

  • 88

    முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

    குளிர்சாதன பெட்டியில் வைத்தல் : நீங்கள் முந்திரி பருப்புகளை மொத்தமாக வாங்கியிருந்தால், அவற்றை காற்று புகாத கொள்கலனில் டைட்டாக அடைத்து வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைப்பது ஒரு நல்ல வழியாக அமையும். இவ்வாறு நீங்கள் சேமித்து வைக்கும் முந்திரி பருப்பானது, சுமார் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

    MORE
    GALLERIES