சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்த காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை டேஸ்டியாக வைக்க சில டிப்ஸ்-ஐ இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
துவரம் பருப்புடன் வெந்தயத்தை அரைமணி நேரம் ஊறிய பிறகு வேகவிடவும். அப்படி வெந்தயம் சேர்த்து வேக வைத்த சாம்பார் கெடாமல் பார்பதற்கும் சிவைப்பதற்கும் ஃப்ரெஷாகவே இருக்கும். அதுபோலவே சாபாருக்கு அல்லது குழம்பு செய்ய வழக்கமான புளி ஊறவைத்து செய்யவும். அப்படி செய்தால் மற்ற சாம்பாரைவிட இதற்கு ருசி அதிகமாக கிடைக்கும்.