மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்த பிறகு அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ள வேண்டும்.. ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்வதால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். முக்கியமாக எந்த அளவுக்கு நாம் அழுத்தம் கொடுத்து மாவை பிசைகிறோமோ அந்த அளவிற்கு சப்பாத்தி மிருதுவாக வரும். எனவே சப்பாத்தி மாவை நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, மாவு பிசையும்போது சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால், மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதோடு, சுவையாகவும் இருக்கும். இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு மூடி வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து மாவை வட்டமாக தேய்த்து கல்லில் சுட்டு எடுத்தால் நீங்கள் எதிர்பார்த்த சாஃப்டான மற்றும் வாயில் போட்டதும் கரையும் சப்பாத்தி தயாராக இருக்கும். இந்த சப்பாத்தி புஸ் என்று பூரித்து வரும். இவை அதிக நேரம் சாஃப்ட்டாகவும் இருக்கும். இவற்றுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம்.