தற்போது மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புரதத்தை காபியில் சேர்க்கிறார்கள். இதற்கு ப்ரோஃபி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் காபியில் புரதம் சேர்ப்பது ஏன் ? இது உடல்நலத்துக்கு நல்லதா இல்லை தீங்கானதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. அதுகுறித்து இங்கு காண்போம்.,
அது என்ன "ப்ரோஃபி" : சாதாரணமாக உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு காபியையோ அல்லது ப்ரோட்டீன் உள்ள பானத்தையோ குடிப்பது பலருக்கு விருப்பமாக இருக்கும். அன்றாடம் காபியை விரும்பி பருகும் காபி பிரியர்கள் தன்னுடைய தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க காபி குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு ப்ரோட்டீன் பானங்களை அருந்த பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் , இனி அந்த பிரச்சினை இல்லை. ஒரே நேரத்தில் காபி மற்றும் ப்ரோட்டீன் ஷேக்கை குடிக்கலாம். “ப்ரொஃபி “ என்பது பெயரிலே இருப்பது போல ப்ரோட்டீன் மற்றும் காபி கலவை தான். ப்ரோட்டீன் சத்துக்களை எளிதில் பெறுவதற்கு இந்த வழி சிறந்தது என்று கூறுகிறார்கள். உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே இது பிரபலமடைந்துள்ளது.
ப்ரோஃபி - செய்யும் முறை : காபியை தயாரிக்கும் போது அதில் ப்ரோடீன் ஷேக்கை கலக்கலாம் அல்லது சில ஸ்பூன் ப்ரோடீன் பவுடரையோ சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ப்ரோடீன் பவுடரை ஒரு கப் சூடான காபியை விட ஐஸ்க் காபியுடன் கலந்து அருந்தலாம். ஒரு ஸ்பூன் பவுடரை கலக்கும் போது சுமார் 20 கிராம் ப்ரோடீன் அதாவது புரதசத்து உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான புரதச்சத்தை நீங்கள் எளிதாக பெற்று கொள்ள முடிகிறது.
மையை கொடுக்கக்கூடியது :உயிரணுக்களின் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.நம் உடலுக்கு தினமும் ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது மற்றும் வலுவான தசைகளை பெற முயற்சிக்கும்போது அதன் தேவை அதிகரிக்கிறது.மறுபுறம் ப்ரோஃபி வொர்க்அவுட்டின் போது அதிக வலிமையை அளிக்கும். ப்ரோஃபியை உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக்கொள்வது தசைகளுக்கு தேவையான சக்தியை கொடுக்கவும், கடுமையான உடற்பயிற்சியிலிருந்து விரைவாக மீளவும் உதவும். எனவே, காலை உணவை அடிக்கடி தவிர்ப்பவர்களுக்கு, காபியில் புரதம் சேர்ப்பது மதியம் வரை அவர்களுக்கு முழுமையான சக்தி கிடைக்க உதவும்.
ப்ரோஃபி குடிக்கலாமா? வேண்டாமா? : நீங்கள் ப்ரோடீன் காபியை உட்கொள்ளாமல், நேரடியாக நமக்கு அன்றாடம் கிடைக்கும் முட்டை, ஓட்மீல், குயினோவா ஆகியவைகளில் இருந்து எடுப்பதே சிறந்தது.மேலே கூறிய பொருள்களில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை உங்களின் உடலுக்கு மற்ற சத்துக்களை வழங்கவும் உதவும். உங்கள் உடல்நலத்தை பேணிக்காக்க இயற்கை முறையை பின்பற்றுங்கள். இந்த ப்ரோடீன் காபியை குடிக்க விரும்பினால் 'நாள் ஒன்றுக்கு ஒரு முறை குடிக்கவும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.