முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

மசாலா டீயை வீட்டிலேயே சுவையாக தயாரிப்பது எப்படி என்று இதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

  • 15

    வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

    டீ சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். சிலர் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடுவர் ஆனால் டீ அருந்தாமல் இருக்க முடியாது. தண்ணீர், பால் சேர்க்கும் விகிதம் தான் டீயின் சுவையை தீர்மானிக்கிறது. டீயில் எண்ணற்ற வகைகள் உள்ளது, இஞ்சி டீ, புதினா டீ, க்ரீன் டீ என வரிசையாக கூறலாம். ஆனால் என்றும் மக்களை கவர்வதில் மசாலா டீ முக்கிய பங்கு வகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

    குறிப்பிட்ட மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டீ சுவை மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் இதில் ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டையின் வாசனையும், ஜாதிக்காயின் சுவையும் நிறைந்துள்ளது. இந்த மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரித்து பாட்டிலில் அடைத்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 35

    வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

    மசாலா டீ செய்வதற்கான தேவையான பொருட்கள்: கிராம்பு - 3 டீஸ்பூன், பச்சை ஏலக்காய்  - 1/2 கப், கருப்பு மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை (2 அங்குல குச்சி) - 2, உலர்ந்த இஞ்சி தூள் - 1/4 கப், ஜாதிக்காய் தூள் - 1 டீஸ்பூன், பெருஞ்சீரகம் -  ¼ தேக்கரண்டி, குங்குமப்பூ - 8.

    MORE
    GALLERIES

  • 45

    வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

    செய்முறை :  அடுப்பில் வாணலியை வைத்து குறைந்த தீயில் கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வறுக்கவும். மிதமான மணம் வரும் வரை பெற வதக்கவும், ஆனால் கருகாமல் மிகவும் கவனமாக இருங்கள். மேலும் அதிக நிறம் மாறும் வரை காத்திருக்க வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 55

    வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

    பின்னர் ஆறவைத்து இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு அரைக்கவும். மிகவும் நைசாக அல்லாமல் கொஞ்சம் கரடுமுரடாக அரைத்து எடுத்து கொள்வது நல்லது.  நீங்கள் மசாலா டீ தயாரிக்கும் போது இந்த தூளை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டால் போதும், சுவையான மசாலா டீயை உடனடியாக தயாரித்து அருந்தலாம். குங்குமப்பூ உங்கள் டீக்கு நல்ல நிறத்தை வழங்கும். அதேபோல இந்த மசாலாக்கள் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும்.

    MORE
    GALLERIES