என்னதான் ஏகபோக விருந்து என்றாலும் இறுதியாக தயிர் இல்லை எனில் அது முழுமை பெறாது. அந்த அளவிற்கு தயிருக்கென தனிச் சிறப்பு உண்டு. விருந்து மட்டுமல்ல... வீட்டிலும் பலர் மதிய உணவில் இறுதியாக தயிர் சாப்பிட்டு முடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது வீட்டுத் தயிர் வேண்டுமெனில் முதல் நாள் இரவே பாலில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு காய்ச்சி, ஆற வைத்து பின் உறை மோர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பார்த்தால் நொதித்து தயிராக மாறிவிடும். இந்த செயலில் சில நேரங்களில் இரவு தயிருக்கு ஊற வைக்க மறந்து போகலாம் அல்லது அதிக வேலை இருக்கலாம். இதனால் வீட்டு தயிர் இல்லாமல் போகும். அவர்களுக்கெல்லாம் இனி கவலையே வேண்டாம். நொடியில் கெட்டி தயிரை தயார் செய்ய இந்த டிப்ஸ் உதவலாம்.