முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

Bread Gulab jamun | இந்த பிரெட் குலோப் ஜாமுன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாகத்தான் செலவாகும். வாருங்கள் எப்படி சுவையான பிரெட் குலாப் ஜாமுனை செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 • 16

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் குலோப் ஜாமுன் மாவை வாங்கி உடனடியாக செய்ய ஆரம்பித்து விடுவோம். ஆனால் இனி அந்த இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் இந்த பிரெட் மட்டும் வைத்தே ஒரு சூப்பரான சாஃப்ட்டான குலோப் ஜாமுன் செய்ய முடியும். பிரெட் குலோப் ஜாம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  தேவையான பொருட்கள்:  பிரெட் - 6 துண்டுகள், பால் - 6 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 கப், நீங்கள் பிரவுன் பிரெட், கோதுமை பிரட் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற எந்த ஒரு பிரட் வகையையும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் பிரெட்-ஐ 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கி, அதை பிளெண்டரில் தூள் செய்து கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 36

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  அதனுடன் பால் சேர்த்து, நன்றாக பிசையவும். தொடக்கத்தில் ஒன்றோடு, ஒன்று ஒட்டாமல் சற்று பிசுபிசுப்பாக தோன்றும். இருப்பினும், நன்றாக பிசைந்தால் ஒரு இலகுவான மாவு கிடைக்கும். பால் கூடுதலாக சேர்க்க வேண்டாம்.

  MORE
  GALLERIES

 • 46

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  இதற்கிடையே, குலாப் ஜாமூனுக்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து, சர்க்கரை நன்றாக கரையும்படி செய்ய வேண்டும். கரைந்த பிறகு, தீயை சற்று குறைத்து, இந்த கலவை கெட்டியாக வரும் வரை வைத்திருக்கவும். சரியான பதம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

  MORE
  GALLERIES

 • 56

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  அதன் பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை எடுத்து, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இந்த உருண்டைகளை நல்ல பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பொறித்த உருண்டைகளை, தூய்மையான வெள்ளைத் தாளில் ஒட்டி எடுத்து, அதில் இருந்து எண்ணெய்யை பிரித்து எடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 66

  ஈஸியான பிரெட் குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி..!

  இப்போது ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த சர்க்கரை பாகில், இந்த உருண்டைகளை சேர்த்து மீண்டும் லேசாக சூடேற்றவும். பின்னர் அதனை ஒரு மணி நேரம் இந்த சர்க்கரைப் பாகில் ஊற வைக்க வேண்டும். சர்க்கரை பாகில் ஊறிய பிறகு உருண்டைகள் நல்ல சாஃப்ட்டாகவும், ஸ்வீட்டாகவும் மாறி விடும். இப்போது, பிரெட் குலோப் ஜாமூன் ரெடி.

  MORE
  GALLERIES