டீ , காஃபி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. யாரும் செய்ய முடியாத விஷயங்களை ஒருவருக்கு சூடான இந்த டீ , காஃபி செய்யுமென்றால் ஆச்சரியமில்லை. அதை சிலர் செண்டிமெண்டாகவும் அணுகுவதுண்டு. இப்படி நம்மோடு இணைந்த இந்த டீ, காஃபியில் கூட உண்மைத் தன்மையை கலப்படமாக்கும் சிலர் இருக்கின்றனர். நாமும் டீ தூள், காஃபி தூள்களை ஒரிஜினல் என நம்பி வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி போலியானவற்றை கண்டறிவது நாம் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்பதை விட நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். எனவே இந்த டீ தூள், காஃபி தூள்களில் இருக்கும் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்று பார்க்கலாம்.
காஃபி தூள் : காஃபி தூளில் சிக்கரி கலப்படம் அதிகமாக இருக்கிறது.எனவே காஃபி தூள் கலப்படத்தைக் கண்டறிய கிளாசில் தண்ணீர் நிரப்பி அதில் காஃபி தூளை போடுங்கள். காஃபி தூள் அப்படியே மேலே மிதக்கும். அவ்வாறு மிதந்தால் சிக்கரி கலக்காத ஒரிஜினல் காஃபி தூள். ஒருவேளை தண்ணீரில் போட்டதும் அவை கரைந்து நிறம் மாறினால் அது கலப்படம். அதாவது அதில் கலந்துள்ள சிக்கரி தண்ணீரில் போட்டதும் கரைந்து நிறத்தை மாற்றிவிடும். அப்படி இருந்தால் அது போலியான காஃபி தூள்.