கார, சாரமான உணவுகளை சாப்பிடும்போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுகுறித்து புது டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் முகேஷ் மெஹ்ரா கூறுகையில், “குடல் நலனுக்கு குந்தகம் விளைவிக்கின்ற கிருமிகளின் பெருக்கம் கோடை காலத்தில் மிகுதியாக இருக்கும்’’ என்றார்.
ப்ரோக்கோலி, பெர்ரி, ஆரஞ்சு, இஞ்சி, வெங்காயம், நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உட்கொண்டால் கோடைகால காய்ச்சல் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். எப்போதும் உங்களுக்கு விருப்பமான மட்டன், சிக்கன், மீன் போன்ற உணவுகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல, அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் அளவையும் குறைக்க வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் ப்ரோபயாடிக்ஸ் : கொளுத்தும் வெயில் காலத்தில் நம் உடலுக்கு நீர்ச்சத்து மிக, மிக அவசியம் என்பது தெரிந்த விஷயம் தான். நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். குறிப்பாக அடர் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும்.குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ப்ரோபயாடிக் உணவுகள் மூலமாக கிடைக்கின்றன. அந்த வகையில் கோடை காலத்தில் மோர், தயிர், பன்னீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.