பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பல நோக்கங்களுக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கானது என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா? தெரியாது என்றால், இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பயன்படுத்தப்பட்ட, அழுக்கான சமையல் எண்ணெய் பல்வேறு வழிகளில் நம் உடல் நலத்தை பாதிக்கலாம். இது எண்ணெய்களில் டிரான்ஸ்-ஃபேட்டை உருவாக்கலாம், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், அதிக அளவு நச்சுகளை கூட வெளியிடலாம்
1. வடிகட்டி மூலம் சுத்தம் செய்யவும் : ஒரு வடிகட்டி, ஒரு மெல்லிய சல்லடை, ஒரு பேப்பர் காபி பில்டர் வழியாக பயன்படுத்திய எண்ணைய்யை வடிகட்டும் முன், அந்த எண்ணெய்யை குளிர்விக்க மறக்க வேண்டாம். வடிகட்டுவதன் முக்கிய நோக்கம் எண்ணெயில் மீதமுள்ள வறுபட்ட துகள்களை அகற்றுவதே ஆகும் என்பதையும் மறக்க வேண்டாம்.