அந்த வகையில், இன்றைக்கு பெரும்பாலான மக்களால் விரும்பி வாங்கக் கூடிய பொருள்களில் ஒன்றாக ஏர் ஃபிரையர் இருக்கிறது. பயன்படுத்துவதற்கு எளிமையான முறையில் இருக்கிறது. வறுக்க வேண்டிய, பொறிக்க வேண்டிய உணவுப் பொருட்களை இதில் வைத்து சமைக்கும்போது மிகக் கடுமையான வறுவல் முறை தவிர்க்கப்படுகிறது. ஆகையால் அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது.
எப்படி வேலை செய்கிறது : உணவுப் பொருளை வைக்கக் கூடிய பேஸ்கட்டை சுற்றியிலும் சூடான காற்று வலம் வந்தபடி இருக்கும். இந்தக் காற்று அனைத்து கோணங்களிலும் பரவும். இதனால், எண்ணெய் இல்லாமலே கூட உணவுப் பொருளை இது ஃபிரை செய்யும். அதாவது சிக்கன் அல்லது மீன் போன்ற எந்த உணவுப் பொருளுடனும் நீங்கள் சேர்க்கும் கொழுப்புச் சத்து, அதனுடனே இருந்து மொறுமொறுப்பாக இருக்கும்.
சூடான காற்று அனைத்து பக்கம் சரி சமமாக பரவுவதன் காரணமாக, மற்ற ஓவன்களைக் காட்டிலும் ஏர் ஃபிரையரில் சமையல் மிக துரிதமாக நடைபெறும். இதனால், உணவை தயார் செய்வது எளிமையான நடவடிக்கையாக மாறுகிறது. சாதாரணமாக நீங்கள் ஏர் ஃபிரையரில் ஒரு சிக்கனையோ அல்லது மீனையோ வைக்கும்போது, அதை எப்போது திருப்பி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நினைவூட்டுகிறது.