முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் அதேசமயம் அரிசி உணவையும் தவிர்க்க முடியவில்லை எனில் உங்களுக்கு பாஸ்மதி அரிசி பெஸ்ட் சாய்ஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

 • 17

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  இந்திய உணவு என்றாலே அரிசிதான் பிரதானமாக இருக்கும். ஆனால் அதன் மாவுச்சத்துக் காரணமாக பலரும் டயட் என்கிற பெயரில் தவிர்த்து வருகின்றனர். அரிசி வகை உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறது. அதோடு சர்க்கரை நோயை தருகிறது என்பதும் கூடுதல் காரணங்கள். ஆனால் உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா..? பாஸ்மதி அரிசி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். அதோடு உங்கள் தொப்பையையும் கரைக்கும். எப்படி?

  MORE
  GALLERIES

 • 27

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் அதேசமயம் அரிசி உணவையும் தவிர்க்க முடியவில்லை எனில் உங்களுக்கு பாஸ்மதி அரிசி பெஸ்ட் சாய்ஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  பொதுவாக பாஸ்மதி அரிசி சற்று விலை கூடுதல் என்பதால் பிரியாணி, புலாவ் போன்ற சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் அதை அன்றாட சாதமாக வேக வைத்து சாப்பிட்டால் பல வகையான ஆரோக்கியங்களைப் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  டயட் குறித்து விமர்சனம் செய்யும் ஒரு நிறுவனம் ரைஸ் டயட் என்கிற பாரம்பரிய டயட் முறையை ஆய்வு செய்தது. இந்த ரைஸ் டயட் 1939 ஆண்டு உடல் எடையை குறைக்க உருவாக்கப்பட்டது. அதேபோல் நீரிழிவு நோய் , இதய பாதிப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 57

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  இந்த பாஸ்மதி அரிசியில் சோடியம் குறைவாக உள்ளது. அதோடு கொழுப்பு குறைவாக உள்ளது. முழு தானியத்தின் நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. மற்ற அரிசிகளை காட்டிலும் இதில் கலோரி மிகவும் குறைவு. அதாவது மற்ற அரிசியில் 52 என்கிற அளவுடன் கிளைசமிக் இன்டெக்ஸ் (glycemic index) குறைவாக உள்ளது. மற்ற அரிசி வகைகளில் GI அளவு 79 ஆக இருக்கிறது எனில் பாஸ்மதி அரிசியில் GI அளவு 50 ஆக உள்ளது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க நினைத்தால் பாஸ்மதி அரிசி சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  குறிப்பாக வெள்ளை பாஸ்மதி அரிசியை காட்டிலும் பிரவுன் பாஸ்மதி அரிசியில் கூடுதலான கலோரி, கார்ப்ஸ் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கூடுதலாக அதிக பாஸ்பரஸ், மெக்னீசியம், ஸிங்க் , விட்டமின் ஈ, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

  MORE
  GALLERIES

 • 77

  அடடே... பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?

  பாஸ்மதி அரிசி சாப்பிட செரிமானமும் மெதுவாக இருப்பதால் விரைவில் உங்களுக்கு பசி எடுக்காது. இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்காது. எனவே பிரியாணி, புலாவ் உணவுகளுக்கு மட்டுமன்றி, காய்கறி குழம்பு வகைகள், கறிக்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கும் ருசியாக இருக்கும். அதேசமயம் உணவின் அளவிலும் கவனமாக இருங்கள்.

  MORE
  GALLERIES