முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

தினசரி பாதாம் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளுக்கு உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 • 17

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  பாதம் பருப்புகள் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இதனால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பாதாம்களை சாப்பிடுவதற்கும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறி இருக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட 2 புதிய ஆய்வுகளின் படி உணவு சாப்பிடுவதற்கு முன் பாதாம் சாப்பிடுவது அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மேம்படுத்துகிறது என்று தனியார் செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  புதிய ஆய்வுகள் சொல்வது என்ன? : 3 நாட்கள் நடத்தப்பட்ட முதல் ஆய்வு European Journal of Clinical Nutrition-ல் வெளியிடப்பட்டது மற்றும் இரண்டாவது ஆய்வு Journal Clinical Nutrition ESPEN-ல் வெளியிடப்பட்டது. இந்த 2 ஆய்வுகளிலும் சுமார் 60 பேர் பங்கேற்க வைக்கப்பட்டனர். இவர்கள் தினசரி காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு எடுத்து கொள்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன் ஒரு சிறிய கையளவு (20 கிராம்) பாதாம்களை தொடர்ந்து சாப்பிட வைக்கப்பட்டனர்.

  MORE
  GALLERIES

 • 37

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  ஆய்வின் முடிவில் பாதாம் உள்ளிட்ட உணவுகள் சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை (Glucose control)  ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கன்ட்ரோல் ஒருவருக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் வளர்ச்சியை தடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 47

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  ஆய்வின் முதன்மை எழுத்தாளரான அனூப் மிஸ்ரா கூறுகையில், எங்கள் ஆய்வுகளின் முடிவுகள் உணவு உத்தியின் ஒரு பகுதியாக ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதில் பாதாம் ஒரு முக்கிய பங்காக இருக்க கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது என்றார். ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் ஒரு சிறிய அளவு பாதாம் சாப்பிடுவதன் மூலம் இந்தியாவிலுள்ள ப்ரீடயாபெட்டீஸ் கொண்ட ஆசிய இந்தியர்களின் கிளைசெமிக் கன்ட்ரோலை மூன்றே நாட்களில் விரைவாக மேம்படுத்தும் என்றும் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  பாதாமில் அடங்கி இருக்கும் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் , ஜிங்க் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்டவை சேர்ந்து சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை வழங்கவும் பசியைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கணிசமான வளர்சிதை மாற்ற மேம்பாடுகள் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு (23.3%) ஆய்வில் பங்கேற்ற ப்ரீடியாபயாட்டீஸ் பங்கேற்பாளர்கள் இயல்பான ரத்த குளுக்கோஸ் ஒழுங்குமுறைக்கு திரும்ப வழிவகுத்ததாகவும் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

  MORE
  GALLERIES

 • 67

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  பாதம் நுகர்வால் கிடைக்கும் பிற முக்கிய நன்மைகள்: பாதம் பருப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருப்பதால் நமது உடல் செல்களில் உள்ள மூலக்கூறுகளை மோசமாக பாதிக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிற்கு எதிராக உதவுகிறது.1 அவுன்ஸ் பாதாமில் தினசரி வைட்டமின் E தேவையின் 50% உள்ளது. வைட்டமின் ஈ எடுத்து கொள்வது இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு ரத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புச் செயல்பாடு போன்றவற்றுக்கும் உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாதாம்.. ஆய்வில் வெளியான நல்ல செய்தி..!

  தினசரி பாதாம் சாப்பிடுவது சிறிதளவு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது அதிகம் இருக்கும் LDL கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஃபைபர் சத்து இதில் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை அதிகரித்து தேவையற்ற உணவுகளை அதிகம் சாப்பிட விடாமல் தடுப்பதில் உதவுகிறது.

  MORE
  GALLERIES