என்ன இப்படி குண்டா இருக்க? என பலர் நம்மிடம் கேட்கும் போது நிச்சயம் மனதில் ஒரு ஓரத்தில் கஷ்டம் ஏற்படும். உடனே எப்படியெல்லாம் உடல் எடையை குறைக்கலாம் என யூடியூப் மற்றும் கூகுளில் தேட ஆரம்பிப்போம். ஒரு சிலர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வது, டயட் போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆனால் இதுப்போன்ற முறைகளில் போதுமான ஆற்றல் உடலுக்குக் கிடைக்காததால் உடல் பலவீனம் அடைகிறது. . பின்னர் மருத்துவர்களின் அறிவுரைகளின் பேரில் மீண்டும் வழக்கமான உணவுமுறைக்கு மாற ஆரம்பிப்பார்கள். இனி இது போன்ற நிலை உங்களுக்கு வரக்கூடாது என்றால்? உங்களது உடல் எடைக்குறைப்பதற்கான முயற்சியில் நீங்கள் தேனை உட்கொள்ளலாம்.
இரவு தூங்குவதற்கு முன்னதாக தேனை நீங்கள் உட்கொள்ளும் போது உங்களுக்கு பசி உணர்வு அதிகளவில் இருக்காது. இதனால் அதிக கலோரியுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிட நேரிடாது. தேனில் உள்ள அத்தியாவசிய ஹார்மோன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் பசியை குறைப்பதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க உங்களது உணவில் தேன் சேர்க்க விரும்பினால், நீங்கள் தேனை பயன்படுத்தி செய்ய வேண்டிய சில சமையல் குறிப்பு விவரங்கள் இங்கே உங்களுக்காக…
பின்னர் இலவங்கப்பட்டை நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்ந்து பருக வேண்டும். இலவங்கப்பட்டையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஆண்டிபராசிடிக் குணங்கள் உள்ளதால், இன்சுலின் உணர்திறன் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சரி செய்கிறது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தேன் மற்றும் பால் : உடல் எடை குறைப்பிற்கு முதலில் ஒரு தேக்கரண்டி தேனை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாலில் கலந்து குடிக்கலாம். பாலில் உள்ள புரத சத்துக்கள் உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது. மேலும் வயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தேன் மற்றும் க்ரீன் டீ : டயட்டில் இருக்கும் பெரும்பாலோனோர் சமீப காலங்களாக க்ரீன் டீ அருந்தும் பழக்கத்தில் உள்ளனர். ஆனால் இதில் கசப்புத்தன்மை இருப்பதால் தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. எனவே க்ரீன் டீயில் சிறிது தேன் சேர்த்து பருகலாம். இது உடல் எடை குறைப்பிற்கு உதவியாக உள்ளது. தேனில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் எடைக்குறைப்பிற்கு உதவுவதோடு உடலுக்கு ஆற்றலை வழங்குவதை தெரிந்துக்கொண்டோம். எனவே இனி நீங்களும் இதை முயற்சி செய்துப்பாருங்கள்.. முக்கியமாக எடையை குறைக்க ஒருவர் ஒரு நாளைக்கு 70-95 கிராம் தேனை உட்கொள்ளலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் தேன் ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் சோதனை செய்த பின்னர் நீங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.