முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

சிலர் மிச்சம் பிடிக்க வீட்டிலேயே நெய் தயாரிக்கின்றனர். ஆனால் பலருக்கும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. இனிமேல் முயற்சிக்கும்போது இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி செஞ்சு பாருங்கள். நல்ல கமகமவென நெய் திரண்டு வரும்.

  • 14

    நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

    இப்போது சமையலுக்கு நெய் பயன்படுத்தாத வீடுகளே இல்லை. சாம்பார் சாதம் தொடங்கி பிரியாணி வரை பல உணவுகளிலும் சுவைக்காவும், மணத்திற்காகவும் நெய் பயன்படுகிறது. இதனால் கட்டாயம் மாத மளிகை பொருட்களின் பட்டியலில் நெய் சேர்க்கப்படுகிறது. ஆனால் நெய்க்காகவே குறிப்பிட்ட பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் அதன் விலை அப்படி.. சிலர் மிச்சம் பிடிக்க வீட்டிலேயே நெய் தயாரிக்கின்றனர். ஆனால் பலருக்கும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. இனிமேல் முயற்சிக்கும்போது இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி செஞ்சு பாருங்கள். நல்ல கமகமவென நெய் திரண்டு வரும்.

    MORE
    GALLERIES

  • 24

    நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

    பாலேடுகளை சேமிக்கவும் : பால் ஏட்டிலிருந்து நெய் தயாரிக்க, ஒவ்வொரு நாள் காலையும் பால் காய்ச்சும்போது அதிலிருந்து திரண்டு வரும் ஏட்டை அப்படியே இலாவகமாக ஸ்பூனில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு டப்பாவில் சேமித்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். இப்படி தினமும் காலை மாலை பால் காய்ச்சும்போது இப்படி சேகரித்துக்கொண்டே வர அந்த டப்பா முழுவதும் நிறைந்துவிடும். 15 நாட்கள் வரை இப்படி பால் ஏடுகளை எடுத்து வைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 34

    நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

    வெண்ணெய்யை பிரிக்கவும் : நெய் செய்ய முதலில் வெண்ணெய் எடுக்க வேண்டும். இதற்காக, குளிர்சாதன பெட்டியில் இருந்து பால் ஏடுகலை எடுத்து சாதாரண வெப்பநிலையில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும் கலக்கவும். அப்படி அரைக்கும்போது வெண்ணெய் தனியாக பிரிந்து கெட்டியாக வரும். நன்கு அரைக்க அரைக்க வெண்ணெய் முழுவதும் திரண்டு பெரிய உருண்டையாக வரும்.

    MORE
    GALLERIES

  • 44

    நெய் விலை ரொம்ப அதிகமா இருக்கா..? வீட்டிலேயே நெய் தயாரிக்க அசத்தல் டிப்ஸ்..!

    நெய் உருக்கவும் : வெண்ணெய் தனியாக எடுத்ததும் முதலில் கடாயை அடுப்பில் வைத்து தனியாக வைத்திருந்த வெண்ணெயை எடுத்து கடாயில் சேர்க்கவும். இப்போது ஒரு கரண்டியின் உதவியுடன் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் வெண்ணெய் உருக ஆரம்பிப்பதை காண்பீர்கள். மெல்ல மெல்ல வெண்ணெய் எல்லாம் உருகி அதிலிருந்து நெய் வர ஆரம்பிக்கும். நெய் முழுவதுமாக வெளியேறியதும், அடுப்பைஅணைத்து, நெய் ஆறியதும் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும். சிலர் இதில் சில முருங்கை இலையை சேர்ப்பார்கள். அவ்வாறு சேர்த்தால் வாசனை இன்னும் தூக்கலாக இருக்கும்.

    MORE
    GALLERIES