ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சிக்கனில் சமைத்த உணவுகளை யாருக்கு தான் பிடிக்காது. பிரியாணி முதல் தந்தூரி வரை பல வகை வகையான உணவுகள் சிக்கனை பயன்படுத்தி தான் சமைக்கப்படுகின்றன.

 • 16

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  சிக்கனில் சமைத்த உணவுகளை யாருக்கு தான் பிடிக்காது. பிரியாணி முதல் தந்தூரி வரை பல வகை வகையான உணவுகள் சிக்கனை பயன்படுத்தி தான் சமைக்கப்படுகின்றன. இதன் சுவை, மணம், ருசி என எல்லாமே இதற்கான பெரிய பிரியர்களாக நம்மை மாற்றி விடுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் சிக்கன் உணவு வகைகளை வெளியில் சென்று சாப்பிடுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த சிக்கனை எப்போது சமைத்திருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பல உணவகங்களில் முந்தைய நாள் மீந்து போன சமைக்கப்பட்ட சிக்கனை அப்படியே ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து மறுநாள் பயன்படுத்துவதும் உண்டு.

  MORE
  GALLERIES

 • 26

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  உணவு தர கட்டுப்பாடுகளின் படி, இது போன்று சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சேமித்து பிறகு சாப்பிட்டால் பலவித பாதிப்புகள் உண்டாகும் என்று கூறுகிறது. இது உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம் என்று சொல்கின்றனர். எனவே, நீங்கள் சாப்பிடுகிற சிக்கன் சாப்பிடுவதற்கு ஏற்றதா, அல்லது கெட்டு போய் விட்டதா என்பதை அறிய சில வழிகள் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  வாசனை : கெட்டுப்போன சிக்கனை கண்டறிய அதன் மணம் நமக்கு மிகவும் உதவும். இருப்பினும் சில நேரங்களில் அவை கெட்டுப்போவதற்கான அறிகுறிகளைக் காட்டாத தருணங்களும் உண்டு. மசாலாக்கள் மற்றும் சாஸ்கள் சேர்க்கப்பட்ட கோழி இறைச்சியை கெட்டு போய்விட்டால் அதை கண்டுபிடிப்பது கடினம், ஏனெனில் அதன் சுவை மற்றும் வாசனை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு ‘கூர்மையான’ மூக்கு இருந்தால், அதையும் கண்டறிய முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  சிக்கன் : கெட்டுப்போன சிக்கனின் அமைப்பை வைத்தது அது கெட்டு போய்விட்டதா என்பதை உணர முடியும். குறிப்பாக அந்த சிக்கன் துண்டு மெலிதாக மாறும் நிலையில் அது கெட்டு போய்விட்டது என்று அர்த்தம். எனவே, நீங்கள் சாப்பிடும் சிக்கன் அது போன்று இருந்தால் அதை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  தோற்றம் : சிக்கனில் மேற்பரப்பில் சாம்பல் நிறமும் பச்சை நிறமும் கலந்த அச்சு போன்று இருந்தால், அதை தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாவது கெட்டுப்போன சிக்கனை அதிக நேரம் வைத்திருந்தால் அது சாம்பல் நிறமாக மாறும். எனவே உணவகங்களில் இது போன்று நீங்கள் பார்த்தால் அது குறித்து அவசியம் புகார் தெரிவியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  பாதிப்புகள் : ஒரு வேளை நீங்கள் கெட்டு போன சிக்கனை சாப்பிட்டு விட்டால், அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம். நீங்கள் தற்செயலாக கெட்டு போன சிக்கனை சாப்பிட்டால், அதற்காக பீதி அடைய வேண்டாம். அது உங்களை பாதிக்காமல் இருக்கவும் சில வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பல நேரங்களில் இது போன்று கெட்டு போன்ற சிக்கனை சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஏற்பட கூடும். மேலும் வயிற்றுப்போக்கும் உண்டாகும். பல நேரங்களில் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே, இது போன்ற நேரங்களில் மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்.

  MORE
  GALLERIES