முகப்பு » புகைப்பட செய்தி » குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

எலும்புடன் சேர்த்த சிக்கன் கறி  200 கிராம் மற்றும் ஒரு கப் அளவு நறுக்கிய மஷ்ரூம் ஆகியவற்றை எடுத்து 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி கொள்ளவும்.

 • 17

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  நடுங்க வைக்கும் இந்த குளிரில் உங்கள் மனம் எதையாவது சூடாக பருக வேண்டும் அல்லது சாப்பிட வேண்டும் என்று ஏங்கும். மேலும் குளிரிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உடலுக்கு புரதச்சத்து அவசியம் தேவை.

  MORE
  GALLERIES

 • 27

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  ஆக, இந்த சமயத்தில் சூடான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றை சாப்பிடுவது குளிருக்கு இதமாக இருக்கும். அந்த வகையில் புரதம் நிறைந்த பல வகையான சூப் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  சில்லி பீன்ஸ் சூப் : பீன்ஸ் விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை குக்கரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், 3 அல்லது 4 பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் அதனுடன் பீன்ஸ் விதை, ஊட்டி மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சூடான பீன்ஸ் சூப் தயார்.

  MORE
  GALLERIES

 • 47

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  சன்னா தக்காளி சூப் : இரவு முழுவதும் சன்னாவை ஊற வைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து வடித்து எடுத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி கரைசல், மிளகாய் விதைகள், உப்பு, கொத்தமல்லி இலை, எள்ளு விதைகள் போன்றவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் சன்னா மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக சீரகத்தூள் சேர்த்து பின் பருகலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  பருப்பு சூப் : இந்த சூப் வகையை நீங்கள் சூடாக பருகலாம் மற்றும் சாதத்தில் கலந்து சாப்பிடலாம். ஒரு கப் அளவு துவரம் பருப்பு மற்றும் ஒரு கப் அளவு பட்டாணி ஆகியவற்றை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இது ஆறிய பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், பாதாம் பேஸ்ட் ஆகியவற்றை கலந்து வதக்கி, அதனுடன் பருப்பு பேஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது கெட்டியான சூப் தயார்.

  MORE
  GALLERIES

 • 67

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  பார்லி சூப் : இது மிகவும் எளிமையாக மற்றும் துரிதமாக தயாரிக்க கூடிய சூப் வகையாகும். குக்கரில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் பார்லி சேர்த்து வேக விடவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

  MORE
  GALLERIES

 • 77

  குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

  மஷ்ரூம் மற்றும் சிக்கன் சூப் : எலும்புடன் சேர்த்த சிக்கன் கறி  200 கிராம் மற்றும் ஒரு கப் அளவு நறுக்கிய மஷ்ரூம் ஆகியவற்றை எடுத்து 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வேகவைத்த சிக்கன் மற்றும் காளான் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

  MORE
  GALLERIES