முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

நம் உடலின் அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். இது திசுக்களை கட்டமைக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது. அதே போல், இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.

 • 111

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  நம் உடலின் பல செயல்பாடுகளுக்கு புரதச் சத்து மிகவும் அவசியமாகும். உங்கள் உடலுக்குத் தேவையான அன்றாட புரதச் சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பின்வரும் காய்கறிகளை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 211

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  நாம் என்ன தான் தினமும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், நாம் அசைவப் பிரியர்களாக இருந்தால், கறி, மீன், முட்டை என்று அவற்றையே விரும்பி சாப்பிடுவோம். ஏனெனில், அவற்றில் புரதச் சத்து அதிகம் உள்ளது. ஆனால், முட்டையைப் போன்று ஒரு சில காய்கறிகளிலும் புரதச் சத்து நிறைந்துள்ளது. அப்படிப்பட்ட காய்கறிகள் என்னென்ன என்பது பற்றி தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

  MORE
  GALLERIES

 • 311

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  நம் உடலின் அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். இது திசுக்களை கட்டமைக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது. அதே போல், இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. எலும்புகள், தசைகள், தோல் மற்றும் இரத்தத்தின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாததாக அமைகிறது. நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது ஹீமோகுளோபினை கடத்தி நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. மேலும், இது தேவைப்படும் செல்களுக்கு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டு செல்லவும் உதவுகிறது. இந்த நன்மைகள் காரணமாக, நாம் நம் தினசரி உணவில் புரதச் சத்து மிகுந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 411

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி அதிக புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரி கொண்டுள்ள ஒரு காய்கறி ஆகும். இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த ஆதரமாக விளங்குகிறது. இவை நம் ஆரோக்கியத்த்திற்கு பக்க பலமாக இருந்து நம் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதோடு, இதில் ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் கே மற்றும் சி அனைத்தும் உள்ளன. மேலும் இதில் குளுக்கோசினோலேட்டுகளும் உள்ளன. இது புற்றுநோயை எதிர்த்துப் போராட வல்லதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 511

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  பச்சைப் பட்டாணி : பச்சைப் பட்டாணியிலும் அதிக புரதம் மற்றும் நார்ச் சத்து உள்ளது. மேலும், இதில் மிகக் குறைவான கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. அதோடு, இதில் மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், ஃபோலேட், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும் கூமெஸ்ட்ரோல் போன்ற பைட்டோநியூட்ரியன்ட்களும் இதில் உள்ளன. நீங்கள் இன்னும் உங்கள் தினசரி உணவில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இப்போது அதற்கு நேரம் வந்துவிட்டது. உருளைக் கிழங்கு பொரியல் செய்யும் போது பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சாலடுகள் மற்றும் பிரியாணி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 611

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  கேல் : பச்சைப் பட்டாணியைப் போன்று கேல் ஒரு புரதச் சத்து மிகுந்த காய்கறி ஆகும். இதில் ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை வழங்கும் ஃபீனாலிக் கெமிக்கல்கள் உள்ளன. இதன் நன்மைகளை அனுபவிக்க இதனை வேக வைத்து, அல்லது வதக்கி உட்கொள்ளலாம். இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின்கள் கே, சி, ஏ மற்றும் பி6, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் உள்ளன. தோடு, இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் உள்ளன. லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகிய இரண்டும் கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 711

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  ஸ்வீட் கார்ன் : ஆச்சரியமாக உள்ளதா? ஆம், ஸ்வீட் கார்ன் ஒரு காய்கறி. இதில் மிகக் குறைந்த கொழுப்பு மற்றும் மிக அதிக அளவிலான புரதமும் நிறைந்துள்ளன. உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான 9 சதவீதம் புரதச் சத்தை நீங்கள் ஸ்வீட் கார்ன் உண்பதன் மூலம் தாராளமாகப் பெறலாம். இதில் தியாமின், வைட்டமின்கள் சி மற்றும் பி6, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது. புரதச் சத்து மிகுந்த உணவுகளை சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நீங்கள் ஸ்வீட் கார்னை சாண்ட்விச், சூப் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்து பயன் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 811

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  காலிஃபிளவர் (பூக்கோசு) : காலிஃபிளவர் ஒரு புரதம் நிறைந்த காய்கறி ஆகும். இது பல வகையான உணவு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலிஃபிளவரில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் சி மற்றும் கே மற்றும் இரும்புச்சத்து, சினிக்ரின் முதலியவை உள்ளன. இதில் உள்ள குளுக்கோசினோலேட் மூலக்கூறானது புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 911

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  கீரை வகைகள் : கீரை என்பது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சத்தான உணவாகும். இதில் உள்ள புரதம், தேவையான அமினோ அமிலங்களுடன் சேர்ந்து, நமக்கு கிடைக்க வேண்டிய கலோரிகளில் 30 சதவீதம் பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல, புரதம் நிறைந்த காய்கறிகளில் கீரை தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. அதோடு, நம் கண் பார்வையை சீராக பாதுகாக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 1011

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (கிளைக்கோசு) : பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (கிளைக்கோசு) நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த மற்றொரு காய்கறி ஆகும். இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் நார்ச் சத்து மற்றும் புரதச் சத்து சேர்ந்து இது ஒரு முழுமையான உணவாக விளங்குகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்ல, இது பல்வேறு நோய்களுக்கு எதிர்க்கவும் பாதுகாப்பு அளிக்கிறது. மூளையின் கூர்மை முதல் புற்றுநோயைத் தடுப்பது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது வரையிலான ஏகப் பட்ட உடல் நல நன்மைகளை இது வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 1111

  முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

  எனவே, இன்னும் நீங்கள் எதற்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? மேற்கூறிய புரதச் சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் இணைத்துக் கொண்டு அதன் முழுமையான நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியமாக இருங்கள்!

  MORE
  GALLERIES