ஒரு முழு நாளும் எப்படி அமைய வேண்டும் என்பது உங்களின் மார்னிங் ரொட்டீன் (தினசரி காலை வேளை பழக்கம்) உடன் பின்னி பிணைந்துள்ளது. ஒரு நாளின் தொடக்கத்தில் சரியான தேர்வுகளை செய்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த காலை உணவை உண்பது மிகவும் அவசியம் என்று ஆங்காங்கே பேசப்படுவது, ஆரோக்கியம் சார்ந்த வெறும் விழிப்புணர்வு மட்டுமல்ல. உங்கள் ப்ரொடெக்டிவிட்டி (உற்பத்தித்திறன்) மற்றும் வெயிட் லாஸ் (எடை இழப்பு) சார்ந்த 'கோல்'களை அடைவதற்கும் அவசியமே!
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention) கூற்றுப்படி, காலையில் நிறைய புரோட்டீனை உட்கொள்வதன் மூலம் ஒருவர் பெரிய அளவிலான பயன்களை அடையலாம். மாறாக 'லோ புரோட்டீன்' காலை உணவு உங்களை சோம்பலாக உணர வைக்கலாம் புரோட்டீன் - உடலையும் மூளையையும் நன்றாகச் செயல்பட உதவுகிறது மற்றும் ஒருவரை விழிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே தான் உங்கள் மார்னிங் ரொட்டீனில் ஹை புரோட்டீன் உணவுகள் மிகவும் அவசியமாகிறது.
முட்டைகள்: வேகவைத்து சாப்பிட்டாலும் சரி, ஆம்லெட் போட்டு சாப்பிட்டாலும் சரி முட்டைகள் பல நன்மைகளை வழங்கும் ஒரு உணவாகும். அதிக புரோட்டீனுக்கு முட்டையின் வெள்ளைக்கருவை சற்றே கூடுதலாக உட்கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமான முட்டைகள் உங்களுக்கு பசி வராது நீண்ட நேரம் பார்த்துக்கொள்ளும்.
கிரீக் யோகர்ட்: இயற்கையான தயிருடன் ஒப்பிடும்போது கிரீக் யோகர்ட் ஆனது இரட்டிப்பு அளவிலான புரோட்டீனைக் கொண்டுள்ளது. இதை சுவையான யோகர்ட் பர்ஃபைட் ஆக மாற்ற கொஞ்சம் பெர்ரி, ஒரு துளி தேன் மற்றும் சிறிது நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளவும். உங்களின் பிஸியான காலை பொழுதுக்கு மிகவும் ஃபாஸ்ட் அண்ட் ஹெல்த்தியான உணவு ரெடி!
புரோட்டீன் ஸ்மூத்தி: ஒரு நல்ல ஹை புரோட்டீன் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த காலை உணவுகளில் ஸ்மூத்திக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. 25 கிராம் புரோட்டீனுக்கு ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடரை சேர்க்கவும். நார்ச்சத்துக்காக, ஒரு கைப்பிடி பெர்ரி அல்லது ஒரு வாழைப்பழம், ஒரு தேக்கரண்டி ஆளிவிதைகள், சியா விதைகள் அல்லது நட் பட்டரை சேர்க்கவும்.
புட்லா: கடலை மாவில் சிறிது கீன்வா மாவு அல்லது ஓட்ஸ் மாவு சேர்க்கவும். பலவிதமான மாவுகளைச் சேர்ப்பதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகரிக்கும். கூடுதல் புரோட்டீனுக்கு சிறிது கிரீக் யோகர்ட்டை சேர்க்கவும். இந்தக் கலவையை செய்து மூன்று நாட்கள் வரை அப்படியே விட்டு விடலாம், ஒன்றும் ஆகாது. சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதும்.