தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாவர அடைப்படையிலான் உணவுகள் முக்கிய பங்கு வருகிறது. 1977ல் வட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978ல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் உலக சைவ தினம் அனுசரிக்கப்பட்டது.உலக சைவ தினமான இன்று, சைவ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
இரத்த அழுத்தத்தை குறைக்க : தற்போது ஏராளமானோர் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய், பார்வை இழப்பு, பாலியல் செயலிழப்பு, ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இதற்கு சைவ உணவுகள் தீர்வாக இருக்கும். சைவ உணவை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்க முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு : அதிகப்படியான அசைவு உணவுகள் சாப்பிடுவது இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அதில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. எனவே, இறைச்சி உட்கொள்ளலைக் குறைத்து தாவர அடிப்படையிலான சைவ உணவை அதிகரிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சைவ உணவு உண்பவர்கள் குறைவான கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த அளவை கொண்டுள்ளனர். இது இருதய ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இருதய நோய், பக்கவாதம் அல்லது மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது: அசைவ உணவுகள் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சைவ உணவுகளில் கவனம் செலுத்தலாம். உடல் பருமன் ஆபத்து இறைச்சி உணவில் இருந்து சேவை உணவுக்கு மாற்றும்போது குறைகிறது. அதே நேரத்தில் சைவம் அடிப்படையிலான உணவை உட்கொள்பவர்கள் குறைவான எடையைக் கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம்.
நீரிழிவு நோயை தடுக்க : தாவர அடிப்படையிலான உணவுகள் இரண்டு வழிகளில் நீரிழிவு நோயைத் எதிர்த்துப் போராடுகின்றன, அவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்தல் ஆகும். பால் மற்றும் முட்டைகளை உள்ளடக்கிய சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு இறைச்சி உண்பவர்களை விட டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க : சைவ உணவில் நார்ச்சத்து நிறைந்துள்ளன, அவை செரிமான அமைப்பை சீராக இயங்க வைக்கின்றன. சைவ உணவில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன, அவை குடல்கள் வழியாக உறிஞ்சப்படுகின்றன, இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் சைவ உணவில் உள்ள ப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் :
சத்துக்கள் : சைவ உணவு உண்பவர்களுக்கு பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகிய சத்துக்கள் தாராளமாக கிடைக்கிறது. எனினும் அசைவ உணவில் உள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி 12, இரும்பு, அயோடின் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு தாவர வகைகள் உணவில் இருந்து கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.