முகப்பு » புகைப்பட செய்தி » கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.

 • 18

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  இடுப்பில் இருக்கும் எக்ஸ்ட்ரா வெயிட்டை குறைத்து பிட்டான லுக்கிற்கு மாற முயற்சிக்கும் பலருக்கும் சிறுதானிய உணவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். வழக்கமான ராகி, தினை, கம்பு, சோளம், வரகு போன்ற பாரம்பரிய சிறுதானியங்களுடன் பார்லி, குயினோவா, டாலியா போன்ற அரிசி வகைகளையும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தமது டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 28

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  குறிப்பாக அரிசிக்கு சிறந்த மாற்றுகளில் ஒன்றாக குயினோவா விளங்குகிறது. இதில் புரதச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான 9 அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இது சைவ உணவு பிரியர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 100 கிராம் அளவுள்ள பச்சை குயினோவாவில் 20% அல்லது அதற்கும் அதிகமான அளவு புரதமும் நார்ச்சத்தும் உள்ளது. வைட்டமின் பி உடன் 46 சதவீதம் கனிமம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  120 கலோரிகள், 4.4 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 2.8 கிராம் நார்ச்சத்து மற்றும் மீதமுள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. 100 கிராம் குயினோவாவில் 80 சதவீத ஃபைபர் அடங்கியுள்ளது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய குயினோவாவை சமைப்பதும் மிகவும் எளிமையானது. ஆரோக்கியமான இதனை சத்தமே இல்லாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்ப்பதற்கான 5 அசத்தலான ரெசிப்பிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 48

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  1. குயினோவா உப்புமா: சில நிமிடங்கள் வறுக்கப்பட்ட குயினோவாவை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர் தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெயை உற்றி, அதில் கடுகு போட்டு தாளிக்கவும். அத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். இத்துடன் உங்களுக்கு விரும்பமான காய்கறிகளை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். இப்போது கொதிக்கும் நீரில் குயினோவாவை போட்டு, சுமார் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடுங்கள். இந்த உப்புமாவை உங்களுக்குப் பிடித்த எந்த சட்னியுடனும் சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 58

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  2. குயினோவா சாலட்: சமைக்கப்பட்ட குயினோவாவை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு பவுலில் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, வினிகர், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது குயினோவா உள்ள பவுலில் நறுக்கிய கேரட், வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரி, பொடியாக்கப்பட்ட வேர்க்கடலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை கலந்து, அதன் மீதும் தயார் செய்து வைத்துள்ள எலுமிச்சை கரைசலை ஊற்றவும். இப்போது இந்த கலவையை நன்றாக கலந்தால் சுவையான, ஈஸியான குயினோவா சாலட் தயார்.

  MORE
  GALLERIES

 • 68

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  3.குயினோவா புலாவ்: குயினோவாவை கழுவி தனியாக வைக்கவும். ஒரு கடாயை எடுத்து, சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். உங்கள் விருப்பப்படி நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் உடன் விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். எண்ணெய்யில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இந்த காய்கறி கலவையில், கழுவிய சுத்தப்படுத்தப்பட்ட குயினோவாவை சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் மூடி வேக வைக்கவும். சமைத்த பிறகு, மேலே இருந்து ஒரு துளி நெய்யைப் போட்டு சூடாகப் பரிமாறவும்.

  MORE
  GALLERIES

 • 78

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  4. லெமன் குயினோவா: தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தப்பட்ட குயினோவாவை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு சமைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, அதில் கடுகு, கடலைபருப்பு, போட்டு தாளிக்கவும். அத்துடன் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுபடும் வரை வறுக்கவும். இத்துடன் பெருங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இப்போது சமைத்து வைக்கப்பட்ட குயினோவாவை இந்த கடாயில் உள்ள கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

  5. குயினோவா தயிர் சாதம்: இந்த ரெசிபி பட்டியலிலேயே கடைசியாக பார்க்கப்போகும் இதுதான் மிகவும் எளிமையானது. ஒரு கப் குயினோவாவை நன்றாக தண்ணீர் விட்டு கழுவி, மென்மையாக மாறும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிர், துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் சமைத்த குயினோவாவை சேர்க்கவும். இதன் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். விரும்பத்திற்கு ஏற்ப முந்திரியுடன், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தையும் தயிருடன் உள்ள குயினோவா உடன் சேர்த்து நன்றாக ஊறவிடவும்.

  MORE
  GALLERIES