முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

Ragi Health Recipes | இதய நோயை குணப்படுத்துவது முதல் நீரழிவு நோயை கட்டுப்படுத்துவது என உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவை வைத்து, பர்ஃபி, லட்டு, கேக், பான்கேக் போன்ற ஹெல்தியான ரெசிபிகள் செய்யலாம்.

 • 17

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தது அவர்களின் உணவு முறை. கேப்பை, திணை, சோளம், வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் கூழை குடித்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு நாம் ஆரோக்கியமற்ற உணவுமுறைகளைப் பின்பற்றுவதால் சிறு வயதிலேயே பல உடல்நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். இதுபோன்ற நிலைமையை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், சிறு தானியங்களில் செய்யப்படும் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுங்கள். அவற்றில் ஒன்றான கேழ்வரகின் நன்மைகள் மற்றும் அவற்றில் செய்யப்படும் சில ரெசிபிகள் பற்றி அறிந்து கொள்வோம். ராகி என்றழைக்கப்படும் கேழ்வரகில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி3 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களது தினசரி உணவில் ராகியை சேர்க்கும் போது நீரழிவு நோயைக்கட்டுப்படுத்துகிறது. எடை இழப்பு, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  மேலும் கேழ்வரகில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகளவில் இல்லை. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கோப்பையை அவர்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம். இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய கோப்பையைப் பயன்படுத்தி ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி? இங்கே பார்ப்போம்..

  MORE
  GALLERIES

 • 37

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  ராகி பர்ஃபி: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பர்ஃபியை செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதனுடன் ராகி மாவு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் குறைந்த சூட்டில் 3-5 நிமிடங்கள் வேகவைத்து அதனுடன் வெல்லம் சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு பாதாம் தூள், அரை கப் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும். பின்னர் கலவையை நன்கு கலந்து கொஞ்சம் குளிர்ந்த நிலையைக்கு வந்த பின்னர் சிறிய பர்ஃபிகளாக வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  ராகி லட்டு: குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்தான மற்றும் ருசியான ஸ்நாக்ஸ் இது. இதை செய்வதற்கு முதலில், வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்ந்து ஒரு கப் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வெண்டும். பின்னர் அரை கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தைப் பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். வறுத்த மாவில் ஏலக்காய் பொடி, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இறுதியில் காய்ச்ச வெல்லத்தை வறுத்த மாவில் சேர்த்துக் கலந்துவிட்டு சிறு சிறு உருண்டையாகப்பிடித்து லட்டாக செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  ராகி குக்கீ : 50 கிராம் ராகி மாவு, 50 கிராம் கோதுமை மாவை எடுததுக்கொண்டு சுமார் 5-7 நிமிடங்கள் வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில், 60 கிராம் வெல்லம் மற்றும் 80 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் வறுத்த மாவு மற்றும் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து அனைத்துப் பொருள்களையும் நன்கு கலந்து சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். அடுப்பை 160 ° C க்கு முன்கூட்டியே சூடாக்கி, மாவை சிறிய டிஸ்க்குகளாக வடிவமைத்து, காகிதத்தோலில் வரிசையாக ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும். இந்த சுவையான குக்கீகளை 15 நிமிடங்களில் நீங்கள் இந்த முறையைப்பயன்படுத்தி செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  ராகி கேக்: 1 கப் ராகி மாவு, 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் கோகோ பவுடர், 3/4 கப் சர்க்கரை, 1.5 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் போன்வற்றைச் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், 2 கப் பால், 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3/4 கப் உருகிய வெண்ணெய் சேர்க்கவும். ஒரு கேக் டின்னை பார்ச்மென்ட் பேப்பரில் லைன் செய்து கேக் கலவையை ஊற்றவும். 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 35 நிமிடங்கள் வரை கேக் கலவையை வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான ராகி கேக் ரெடி.

  MORE
  GALLERIES

 • 77

  ராகி லட்டு, ராகி பர்ஃபி... உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!

  ராகி பான்கேக்: 1/2 கப் ராகி மாவு, 1/2 கோதுமை மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/4 கப் வெல்லம் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கடாயை சூடாக்கி எண்ணெய் அல்லது நெய் தடவவும். ஒரு டம்ளர் மாவை ஊற்றி, குறைந்த அளவு எண்ணெய்/நெய் பயன்படுத்தி இருபுறமும் சமமாக சமைக்கவும். இப்போது சுவையான புதிய ராகி பான்கேக் தயாராகிவிடும்.

  MORE
  GALLERIES