எடை குறைக்க வேண்டும் என்றால், உங்களின் உணவு பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாவுச்சத்து என்று கூறப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து அதற்கு பதிலாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எடை குறைக்கும் முயற்சியில் முதல் படியாகும். மாமிசம் மற்றும் முட்டை ஆகியவற்றில் தான் புரதம் நிறைந்துள்ளது என்று பலரும் நினைத்துள்ளனர். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு எடை குறைக்க உதவும் புரத உணவுகள் இருக்கிறதா? சைவ உணவு பழக்கம் கொண்ட ஒரு கொண்டவர்கள் எடை குறைப்பதற்கு உதவும் புரதம் நிறைந்த உணவுகளின் பட்டியல் இங்கே.
சோயா பீன்ஸ் :சோயா பீன்ஸ் என்பதும் சமீபகாலமாக பலராலும் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து நிறைந்த குறிப்பாக, புரதம் நிறைந்த உணவாகும். சோயா பீன்ஸ் பயன்படுத்தி பல உணவுகளை செய்யலாம் அல்லது பண உணவுகளில் ஒரு உட்பொருளாகும் சேர்க்கலாம். அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களுக்கு பதிலாக சோயா பீன்ஸை பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு அதிக புரதம் கிடைக்கும், எடை குறைக்கவும் உதவும்.
கீன்வா (quinoa) :எடை குறைக்கவும், குறைவான கலோரிகளை சாப்பிடவும், தானியங்களுக்கு பதிலாக பல ஊட்டச்சத்து நிறைந்த கீன்வாவை, ஊட்டச்சத்து நிபுணர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் சமீபத்தில் அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு நிறைந்த காலை உணவிற்கு கீன்வா மிகச் சிறந்த உணவாக இருக்கும்.
பாலக்கீரை :ஒரு சில கீரைகளை போல் இல்லாமல் பாலக்கீரை மிகவும் சுவையானது மற்றும் பாலக்கீரையை நாம் விரும்பும் வண்ணம் சமைக்கலாம். பாலக் கீரையில் புரதம், இரும்பு சத்து, மற்றும் மற்ற உணவுப் பொருட்களில் அரிதாக காணப்படும் வைட்டமின் கே-யும் நிறைந்துள்ளது. இது எடை குறைப்புக்கு உதவுவதோடு நார்சத்தையும் வழங்கி உங்கள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக ,மேம்படுத்துகிறது.
லெகும்ஸ் :லெகும்ஸ் (beans) என்பது தானிய வகைகளில் உள்ள பீன்ஸ் அதாவது பயறுகளைக் குறைக்கிறது. இவ்வகையான தானியம், பயிறு வகைகளில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உதாரணமாக ராஜ்மா, பட்டாணி, பச்சைப்பயிறு ஆகியவை எல்லாமே ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி ஏற்படுத்தாமலும் இருக்கும்..
பாதாம் மற்றும் முந்திரி :பாதாமில் மற்றும் முந்திரியில் வைட்டமின் ஈ சத்து மட்டும் அல்லாமல் புரதமும் நிறைந்துள்ளது. பாதாமை முழு உணவாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் தின்பண்டங்களுக்கு அல்லது நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக தினமும் கொஞ்சம் ஊற வைத்த பாதாம் மற்றும் முந்திரியை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.