தேன் சர்க்கரைக்கு மாற்றான ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள். எனவே தான், நாம் பல விஷயங்களுக்கு தேனை பயன்படுத்துகிறோம். ஆனால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தேனை உட்கொண்டால் அதிக தீங்கு விளைவிக்கும். ல் நன்மை நிறைந்துள்ள அளவுக்கு தீமைகளும் உள்ளன. இதில், வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். இது காயங்களை விரைவில் குணப்படுத்தும். இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை எளிதாக்க குணமாக்கும். எனினும் இந்த தேனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.