உங்களுக்கு ப்ரீடயாபெட்டீஸ் அல்லது நீரிழிவு நோய் இருக்கும்போது, சாப்பிடும் விஷயத்தில் மிகவும் கவனமாகவும், கட்டுப்பாடுகளுடனும் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் நோய் தீவிரமடைந்து அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவுகள் மற்றும் பானங்கள் சிறந்த தேர்வுகளாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். அதை குறித்து பின்வருமாறு விரிவாக காணலாம்.
ஆப்பிள் (Apples): நீரிழிவு தொடர்பான உணவு திட்டத்தில் பழங்களுக்கு இடமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆப்பிள் பழங்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளாகும். கிளைசெமிக் குறியீட்டை பொறுத்தவரை குறைந்த அல்லது நடுத்தர உணவுகளை இலக்காகக் வைத்துக் கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உகந்த வழியாகும். ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், அந்த நாள் முழுவதும் பல நன்மைகளை உடலுக்கு தருகிறது. அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளன.
பருப்பு வகைகள் (Beans): பருப்பு, கிட்னி பீன், கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் ஆகியவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளாகும். அவற்றின் கார்போஹைட்ரேட்டுகள் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. எனவே, இவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் வாய்ப்பு மிகக் குறைவு. தினசரி மூன்று மாதங்களுக்கு உணவு வேலையின் போது குறைந்த கிளைசெமிக் உணவுகளான பீன்ஸை 1 கப் சாப்பிட்டு வருவதால் ஹீமோகுளோபின் ஏ 1 சி உடலில் எச்.பி.ஏ 1 சி அளவை அரை சதவீத புள்ளியாகக் குறைப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதாம் (Almonds): இந்த முறுமுறுப்பான நட்ஸ்கள் மெக்னீசியம் நிறைந்தவை. இது உங்கள் உடலில் உள்ள சொந்த இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்த உதவும். இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவும் பாதம் பருப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம். கூடுதலாக, பாதாம் போன்ற நட்ஸ்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும் சிறந்த வழியாகும்.
கீரை (Spinach): ஒரு கப் சமைத்த கீரையில் வெறும் 21 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துகள் இதில் நிரப்பப்படுகிறது. கூடுதலாக, பச்சை கீரையை நன்கு கழுவி அதனை ஆலிவ் எண்ணெயிலில் வதக்கி, சிறிது பொன்னேர் சேர்த்து பாலக் பன்னீராக சாப்பிடலாம்.