இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் ஆபத்தா..? அப்போ குறைக்க என்ன சாப்பிடலாம்..? இதோ வழிகள்...
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.
Web Desk | December 16, 2020, 6:43 AM IST
1/ 9
இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு மிகுந்த கவலையாக உள்ளது. ஒருவரின் உடல்நல பிரச்சனைகளுக்கு முதன்மையாக இருப்பது இந்த நீரிழிவு நோய்தான். இத்தகைய நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க போதுமான இன்சுலின் தயாரிக்க முடியாது. இதன் விளைவாக, குளுக்கோஸ் இரத்தத்தில் சேரக்கூடும். இன்சுலின் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்கள் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அசாதாரண நிலையை அடையும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.
2/ 9
அதேபோல மரபணு காரணங்களாலும், பழக்க வழக்கங்களினாலும் நீரிழிவு நோய் வர காரணமாக உள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. தாமதமான சிகிச்சை, நீரிழிவு குறித்த குறைந்த விழிப்புணர்வு ஆகியவையால், உடல் மேலும் மோசமடையும். என்னதான் மருந்து மற்றும் இன்சுலின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையின் உதவியுடன் அவற்றின் சர்க்கரை அளவு சரிபார்க்கப்படுவதை ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
3/ 9
உடலால் மெதுவாக உறிஞ்சப்படும் உணவுகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை இரத்த சர்க்கரையில் அளவு அதிகரித்தல் மற்றும் குறைவை ஏற்படுத்தாது. நீரிழிவு நோயாளிகளைத் தவிர, எதிர்கால நோய்க்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எப்போதும் நல்லது. அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஐந்து உணவுகளை குறித்து கீழே காண்போம்.
4/ 9
ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள்: (Broccoli and other cruciferous vegetables) ப்ரோக்கோலியை மெல்லும்போது, அது சல்போராபேன் எனப்படும் ஒரு சேர்மத்தை வெளியிடுகிறது. இது இரத்த-சர்க்கரையை குறைக்கும் பண்புகளைக் கொண்ட கந்தக அடிப்படையிலான கலவை ஆகும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை ஊக்குவிப்பதற்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் இந்த காய்கறி பயன்படுகிறது. கூடுதலாக, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.
5/ 9
விதைகள் : ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகள் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறைக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. இவை அனைத்தும் சரியான செரிமானத்திற்கும், சரியான நேரத்தில் சர்க்கரையை இரத்தத்தில் வெளியிடுவதற்கும் உதவுகின்றன.
6/ 9
பூண்டு : பல இந்திய வைத்தியம் மற்றும் மேற்கத்திய மருத்துவம் கூட பூண்டு கிட்டத்தட்ட நீரிழிவு நோய்க்கு ஒரு தீர்வாக கருதுகின்றன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதோடு இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. பச்சையாக எடுத்துக் கொள்ளும்போது இது சிறந்தது, ஆனால் உணவு மற்றும் சாலட்களில் சமைக்கப்படலாம்.
7/ 9
பருப்பு வகைகள் : பயறு, பீன்ஸ், சுண்டல் போன்றவை நேர்மறையான கிளைசெமிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவை இந்திய பருப்பு வடிவமாக சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் கூடுதல் சர்க்கரையுடன் கூடிய சமையல் குறிப்புகளில் இல்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
8/ 9
முட்டை : முட்டையில், புரதச்சத்து அதிகம் நிறைந்தது இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணவில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. வேகவைத்து, அல்லது முட்டை பொரியல் செய்து காலை உணவின் போது எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமானது.
9/ 9
ஓட்ஸ் : கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) என்பது ஒரு குறிப்பிட்ட உணவு இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். ஜி.ஐ.யைக் குறைக்கவும், சர்க்கரை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு சிறந்த உணவு ஓட்ஸ். இதில் ஜி.ஐ. மதிப்பெண் 55 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சரியான தேர்வாக அமைகிறது. மேலும் இதில் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் கூடுதல் சேர்க்கைகள் இருப்பதால் இனிப்பு அல்லது ரெடி டு ஈட் ஓட்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது தவிர, உணவில் வெந்தயம், அவில் மட்டும் பாகற்காய் போன்ற பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.